Monday, April 20
Shadow

21 நாட்களில் 50 இலட்சத்தில் உருவான “அமுதா” திரைப்படம்.

PS. அர்ஜூன் என்கிற புதுமுக இயக்குனரின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமுதா”. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள் , யார் கொலையாளி , எதற்காக இந்த கொலை நடக்கிறது என்கிற புதிரான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் PS அர்ஜுன்.

படத்தில் மூன்று பாடல்கள் , ஜெயச்சந்திரன், சித்ரா மற்றும் வினித்ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்கள். இசை அருண் கோபன்.

மூன்று வித கதையோட்டத்தில் விருவிருப்பான ஒரு திரில்லர் படத்தை குறைந்த படத்தில் படமாக்கியிருக்கிறார்கள். விரைவில் அமுதா திரைக்கு வர இருக்கிறது.