Wednesday, March 11
Shadow

திரைப்பட இயக்குனர் பஞ்சு அருணாசலம் பிறந்த தின பதிவு 

பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் ‘நானும் மனிதன்தான்’ என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய “தென்றல்” என்ற பத்திரிக்கையில் “அருணன்” என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின. பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு நடிகர் சுப்பு ஆவார்.

ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராசாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அவர்கள்தான் திரைக்கதை, வசனம் எழுதினார். விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும். இவர் கதை – வசனம் எழுதி தயா ரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்தப் படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத் துள்ளது. தமிழக அரசின் கலை மாமணி விருதை அவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு.

இவர் இயக்கிய திரைப்படங்கள்: இளைய தலைமுறை, என்ன தவம் செய்தேன், சொன்னதை செய்வேன், நாடகமே உலகம், மணமகளே வா, புதுப்பாட்டு, கலிகாலம், தம்பி பொண்டாட்டி

இவர் தயாரித்த திரைப்படங்கள்: ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன், எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாண ராமன், குரு சிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், ராசுக்குட்டி, தம்பி பொண்டாட்டி, வீரா, பூவெல்லாம் கேட்டுப்பார், ரிஷி, சொல்ல மறந்த கதை, மாயக் கண்ணாடி, காதல் சாம்ராஜ்ஜியம்