Friday, March 13
Shadow

எய்தவன் டிரைலர் விமர்சனம்

மதயானைக்கூட்டம் படத்தில் விக்ரம் சுகுமாரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சக்தி ராஜசேகரன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் எய்தவன். அதே கண்கள் வெற்றியைத் தொடர்ந்து கலையரசன் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் பிச்சைக்காரன் நாயகி சாட்னா டைட்டஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். Friends Festivel Films நிறுவனம்

சார்பாக சுதாகரன் தயாரித்துள்ள இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் Abi & Abi Pictures இணைந்து வெளியிடுகின்றனர்.

மே 5-ல் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் இன்று இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ” ஒருத்தனோடு பேருக்கும் அவனோட கேரக்டருக்கும் சம்பந்தம் இருக்கணும்னு அவசியம் இல்ல… ஆனா ஒருத்தன் செய்யும் தொழிலுக்கும் அவன் கேரக்டருக்கும் கண்டிப்பா சம்பந்தம் இருக்கும்” என ஆரம்ப வசனம் மூலமே கவனம் ஈர்க்கிறது டிரைலர்.

கூடவே கிருஷ்ணா, கௌரவ், தர்மன் என மகாபாரத பெயர்களுடன் முன்னணி கதாபாத்திரங்கள் அறிமுகமாவது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் மூன்று இளைஞர்களை இணைக்கும்படி ஒரு பிரச்சனை வெடிக்கிறது. அதிலிருந்து எப்படி மூவரின் வாழ்க்கையும் மாறுகிறது என்பதை பரபரக்கும் திரில்லராக கொடுத்திருப்பார்கள் என்பது டிரைலரை பார்க்கும்போது நிரூபணம் ஆகிறது.

ஒரு டிரைலருடைய அல்டிமேட் கோல், அந்த டிரைலரை பார்ப்பவர்களுக்கு படம்பார்க்கும் ஆவலை அது தூண்டவேண்டும்.அந்தவகையில் வெச்ச குறியில் சரியாக பாய்ந்திருக்கிறான் இந்த ‘எய்தவன்’.

Leave a Reply