Saturday, November 14
Shadow

உணவு வீணாவதைத் தடுக்க இளைஞர்களின் படைப்பாற்றல் குரல்! – PRSI நடத்திய ஒரு நிமிட வீடியோ போட்டியில் தேஜஸ்வினி முதலிடம்

உணவு வீணாவதைத் தடுக்க இளைஞர்களின் படைப்பாற்றல் குரல்! – PRSI நடத்திய ஒரு நிமிட வீடியோ போட்டியில் தேஜஸ்வினி முதலிடம்

சென்னை, நவம்பர் 13:

உணவை வீணாக்காமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை இன்றைய இளைஞர்களின் படைப்பாற்றல் மூலம் சமூகத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய மக்கள் தொடர்பு கழகத்தின் (PRSI) சென்னை கிளை சார்பில் ஒரு நிமிட விழிப்புணர்வு வீடியோ போட்டி சென்னையில் நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் சவேராவில் நடைபெற்ற இப்போட்டிக்கு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ஆதரவு அளித்தது. ‘உணவைச் சேமிப்போம், வீணாக்குவதைத் தவிர்ப்போம், சிறப்பாக வாழ்வோம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில், உணவின் முக்கியத்துவத்தையும் உணவு வீணாவதால் ஏற்படும் பாதிப்புகளையும் ஒரு நிமிடக் காணொளி மூலம் வெளிப்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

‘சிந்திப்போம், படைப்போம், பேசுவோம்’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று, தங்களது புதுமையான சிந்தனைகளையும் சமூக அக்கறையையும் வீடியோ படைப்புகளாக வெளிப்படுத்தினர்.

போட்டியின் சிறந்த படைப்புகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சென்னையைச் சேர்ந்த சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் காட்சித் தொடர்பியல் துறை மாணவி எஸ். தேஜஸ்வினி முதல் பரிசாக ரூ.25,000 வென்றார்.

சென்னை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் (VISTAS) காட்சித் தொடர்பியல் துறை மாணவர் கிராஸ் ஷெரூன். எஃப். இரண்டாம் பரிசாக ரூ.15,000 பெற்றார். திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர் ஆர். இர்பான் மூன்றாம் பரிசாக ரூ.10,000 வென்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் (AVP & Head) தினேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.

PRSI சென்னை கிளைத் தலைவரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியருமான டாக்டர் என். ராஜா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் அவர் வழங்கிப் பாராட்டினார்.

உணவு வீணாவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களின் படைப்புகள் வழியாகப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியாக இப்போட்டி அமைந்தது.

Young Creators Champion Food Conservation: PRSI Chennai Announces Winners of One-Minute Video Competition

Chennai, November 13, 2026:

Highlighting the role of young communicators in creating social awareness, the Public Relations Society of India (PRSI), Chennai Chapter, organised a one-minute Public Service Announcement (PSA) video competition on food conservation at Hotel Savera, Mylapore, Chennai, on November 13.

The competition was organised with the support of Coromandel International Limited, with the theme “Save Food – Waste Less, Live Better.” The initiative aimed to encourage young minds to use their creativity and communication skills to spread awareness about food conservation and the importance of preventing food wastage.

Held under the tagline “Think, Create, Speak!”, the competition witnessed enthusiastic participation from students across Tamil Nadu. Participants showcased their ideas and social responsibility through innovative one-minute videos highlighting the need to reduce food waste and promote responsible food consumption.

Following the evaluation of the entries by the jury, the winners were announced.

The first prize of Rs. 25,000 was awarded to S. Tejaswini, Department of Visual Communication, Sathyabama Institute of Science and Technology, Chennai.

The second prize of Rs. 15,000 went to Cross Sheroon F., Department of Visual Communication, Vels Institute of Science, Technology and Advanced Studies (VISTAS), Chennai.

The third prize of Rs. 10,000 was awarded to R. Irfan, Department of Visual Communication, Jamal Mohamed College, Tiruchirappalli.

Dinesh Kumar, AVP and Head of Corporate Communications and Marketing at Coromandel International Limited, attended the event as the Chief Guest and delivered a special address.

The programme was presided over by Dr. N. Raja, President of PRSI Chennai Chapter and Associate Professor, Department of Visual Communication, Vels Institute of Science, Technology and Advanced Studies. He honoured the winners by presenting them with certificates of appreciation and cash awards.

The initiative served as a platform for young communication professionals and students to demonstrate how creative storytelling and effective communication can inspire positive social change, particularly in promoting food conservation and responsible consumption.

Coromandel International Limited supported the event as its sponsor.