Wednesday, October 28
Shadow

விஷாலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டாராம் ராகுல் ப்ரீத் சிங்.

தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்களில் நடித்தவர் ‘ராகுல் ப்ரீத் சிங்’. தமிழில் பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகில் அம்மணிதான் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அங்கு சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் மார்க்கெட்டை இழந்ததற்கு இவர் தான் முக்கிய காரணம். அவர்களுக்கு செல்லும் படங்களையெல்லாம் தட்டி பறித்து முன்னணி நடிகையாகிவிட்டார் ராகுல் ப்ரீத் சிங்.
தெலுங்கிலேயே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது மீண்டும் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தற்போது மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில்தான் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருக்கிறாராம்.
முன்னதாக துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டாராம் ராகுல் ப்ரீத் சிங். வினோத்-கார்த்தி கூட்டணியில் உருவாகும் இப்படத்தை டிரீம் வாரியர்ஸ், எஸ்ஆர் பிரபு தயாரிக்கிறார். விரைவில் இது பற்றிய முழுவிபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply