Sunday, April 21
Shadow

தெலுங்கு சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சி ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர்கள் எப்போது எதற்காக சண்டையிட்டுக் கொள்வார்கள் என யாருக்குமே தெரியாது. ஒருவர் மாற்றி மற்றவர் திட்டிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருப்பது வழக்கம். ஆனால், இப்போது மாநிலம் விட்டு மாநிலம் மாறி சண்டையிடப் போய் நன்றாக திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ‘கைதி நம்பர் 150’ என ரீமேக் செய்துள்ளார்கள். இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலரை நேற்று இரவு வெளியிட்டார்கள். ஒரு இரவுக்குள்ளாகவே 20 லட்சம் பார்வைகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகில் புதிய சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறது.

சில ஆர்வக் கோளாறு விஜய் ரசிகர்கள் ‘கத்தி’ படம் போல வருமா ?, போய் ‘கத்தி’ டிரைலரைப் பாருங்கள், என்று சிரஞ்சீவி ரசிகர்களை யு டியூப் கமெண்ட்டுகளில் போய் வம்புக்கிழுத்தார்கள். சிரஞ்சீவி பற்றியும் சிரஞ்வீவியின் திரையுலக சாதனைகளைப் பற்றியும் தெரியாமல் பேசாதீர்கள் என விஜய் ரசிகர்களுக்கு சிரஞ்சீவி ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

விஜய் போன்று வெறும் கமர்ஷியல் படங்களில் நடித்தவர் அல்ல சிரஞ்சீவி. தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனரான பாலசந்தர் கூட சிரஞ்சீவியை, ரஜினியும், கமலும் கலந்த கலவை எனப் பாராட்டியுள்ளார். தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் என பல விருதுகளைப் பெற்றுள்ள சிரஞ்சீவிக்கு சர்வதேச அளவில் கூட அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு வாருங்கள் என காட்டமாகப் பதிலளித்துள்ளனர்.

எப்பவும் போல உள்ளூர் நடிகர்களை கிண்டல் பண்ணுவது போல பொய் அசிங்க பட்டுள்ள விஜய் ரசிகர்கள் இது தேவையா அப்படி என்றால் மகேஷ் பாபு நடித்த பல படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார் அவர்கள் ரசிகர்கள் எதவாது சொல்லி இருகிறார்களா எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை .

Leave a Reply