
கடந்த சில நாட்களாக தமிழக கொந்தளித்தது காரணம் ஜல்லிக்கட்டு தடைக்கு இதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் மிகவும் வலுவாக நடந்தது அதில் குறிப்பாக சென்னை போராட்டம் மிகவும் அமைதியாக நடந்தது உலகமே வியப்படையும் அளவில் மிக அமைதியாக நடந்த போராட்டம் கடைசி நாள் போர்கலமானது இதற்க்கு காரணம் ஒவ்வருவரும் ஒரு காரணங்கள் கூறினார் சிலர் சினிமா கார்கள் உள்ளே வந்தது தான் காரணம் ஒரு சில அரசியல்வாதிகள் களம் இறங்கி வான் முறையில் ஈடுபட்டனர் என்றும் கூறினார். மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்த பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் தான் இந்த வன்முறையை போலீஸ் ஈடுபட்டதாகவும் ஒரு தகவல்கள் மத்திய அரசு ஜல்லிக்கட்டு அனுமதி கொடுத்த வுடன் இந்த போராட்டம் ஏன் கைவிடவில்லை என்று ஒரு சிலர் கேள்வியை லாரன்ஸ்யிடம் முன் வைக்க அவர் நேற்று பத்திரிக்கை யாளர்களிடம் கோவத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்.
இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு வெற்றியை பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சில பத்திரிகையாளர்கள் ராகவா லாரன்ஸிடம் கோபப்படும்படியான சில கேள்விகளை கேட்க தொடங்கினர்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்த லாரன்ஸ் திடிரென்று பத்திரிகையாளர்கள் முன்னாடி கொந்தளித்தார். இந்த போராட்டத்துக்காக இளைஞர்களுடன் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் தெரியுமா, என் மனைவி, அம்மா செயினை அடகு வெச்சு போராட்டம் நடத்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட 10 வருஷமா பல நல்ல விஷயங்களை செய்து வருகிறேன். நீங்கள் கேட்கும் கேள்வியெல்லாம் ரொம்ப தப்பாக இருக்கிறது என்று கோபப்பட்டு பேசினார்.
