இயக்குநர் சுந்தர்.C – இன் அவினி சினிமேக்ஸ் (P) லிமிடெட் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்.டிவியுடனும் இணைந்து நாங்கள் உருவாக்கிய திட்டம் தான் இந்த “ நந்தினி “ தொடர் . இந்தியாவிலேயே முதல் முறையாக படத்தயாரிப்பு ( Film Making) செய்து தொடருக்கு வழங்குகிறோம். 4K தொழில்நுட்பத்தில் இத்தொடரை படம்பிடித்து 5.1-ல் மிக்ஸ் ( MIX ) செய்து வழங்குகிறோம் . இது ரசிகர்களுக்கு தொடர் நிகழ்ச்சி பார்த்த அனுபவமாக இல்லாமல் திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும். சிறந்த தரமான தயாரிப்பை நாங்கள் செய்துவருகின்றோம் இது தொடரும். இதில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சார்ந்தவர்கள். இதை நாங்கள் சினிமாவாகவே எடுத்து அதை தொடராக உங்களுக்கு கொடுக்கின்றோம். அதனால்தான் இந்த நந்தினி தொடர் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இது மிகவும் பிரம்மாண்டமான தொடராக இருக்கும். எங்கள் தொடர் மிகபிரம்மாண்டமாக வர இயக்குநர் சுந்தர்.C மிகவும் அதிகமாக சினிமாக்கு இணையாக செலவுகளை செய்துவருகிறார். கிராமப்புறங்களில் இருந்த மக்களிடமிருந்து முற்றிலும் சினிமாவை பார்த்த அனுபவங்கள் தான் உள்ளது என்று அறிக்கை வந்துகொண்டு இருக்கிறது. நந்தினி தொடர் பிரம்மாண்டதின் உச்சம் என்று தான் சொல்லவேண்டும். ஒரு பாம்புக்கும் பேய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சண்டை தான் நந்தினி தொடரின் கதையாகும். இதில் பாம்பாக ஒரு பெண்ணும் பேயாக இன்னொரு பெண்ணும் நடிக்கிறார்கள் . இத்தொடரில் நடிகர் விஜயகுமார் , சச்சு அம்மா, காயத்ரி ஜெயராம், விஜயலட்சுமி, சிங்கம்புலி, சூப்பர்குட் பவா அண்ணன் போன்ற சினிமா கலைஞர்களை பயன்படுத்தியுள்ளோம். நந்தினி தொடருக்கு அரண்மனை போன்ற மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருகே கல்லிடைக்குறிச்சியில் 10 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த தொடர் மற்ற தொடர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ள கேமராவினால் இத்தொடரின் படப்பிடிப்பு நடக்கிறது.
இத்தொடரில் நடிகர் விஜயகுமார் தான் மிகவும் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளார். இந்த தொடரை பொறுத்தவரை. நடிகர் விஜயகுமாருக்கு சகோதரியாக சச்சு அம்மா நடித்துள்ளார். இந்த தொடரில் நந்தினி கதாபாத்திரம் தான் பாம்பு. இத்தொடரின் ஷூட்டிங்கை பார்க்கும் எல்லோரும் இது சினிமா ஷூட்டிங் என்று தான் நினைத்தனர். பெரும்பாலும் இரவில் தான் அதிக கட்சிகள் எடுத்தோம். சிலசமயம் தொடரில் கலைஞர்களே பயந்துவிடுவார்கள். திரையில் பாம்பைக் காட்டும்போது ஓரு மிகப்பெரிய விளைவுயை ஏற்படுத்த பல்வேறு முறைகளில் மற்ற தொடரில் வருவது போல் இல்லாமல் சிறப்பாக இருக்கவேண்டும் என்று புதிய தொழில்நுட்பத்தில் கேமரா வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இந்த வருடம் விருது அவருக்கு தான்.
இந்த தொடருக்காக அனைவரும் கடுமையாக உழைத்ததால் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்த தொடர் மொத்தம் நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளோம். தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் போன்ற நான்கு மொழிகளில் பணியாற்றும் கலைஞர்கள் மொத்தமாக கலந்து வேலைசெய்வதால் இது இந்த தொடரின் சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது . அதிதி என்ற ஒரு குழந்தை கதாபாத்திரம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தொடரை யாரும் குறைசொல்லும் அளவிற்கு இடமே இல்லாமல் சிறப்பாக வந்துள்ளது. இந்த தொடரை எல்லோரும் தவறாமல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பார்த்தால் ஒரு சினிமாவை பார்ப்பதுபோல் ஒரு அனுபவம் இருக்கும். அனைவரும் தங்கள் ஆதரவை தரவேண்டும். இந்த தொடரை வெற்றிபெற செய்யவேண்டும் என்றார் இயக்குநர் ராஜ் கபூர்