Sunday, April 19
Shadow

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி தனுஷ்க்கு வைக்கும் ஆப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரியை சேர்ந்த பையனாக நடித்து வருகிறாராம். எனவே ‘டங்கா மாரி’ போலவே இந்த படத்திலும் ஒரு தர லோக்கல் பாடல் இடம்பெற்றுள்ளதாம். தனுஷுக்கு போட்டியாக இந்த பாடலில் செம குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இந்த படத்துக்கு இசை அனிருத் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply