Friday, April 12
Shadow

பாலிவுட்டில் களமிறங்கும் அஜித்தின் ‘விவேகம்’…!

தல 57 என்ற விவேகம் படம் படபிடிப்பில் இருக்கும்போதே இந்த படத்துக்கு மிகவும் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது . படத்தின் ஒரு போஸ்டரே தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவையே கலக்கியது. இன்னும் இந்த படத்தின் டீசெர் வந்தால் மேலும் பிரமிப்பை உண்டு பண்ணும் போல இருக்கு ஒரு போஸ்டருக்கே இந்த படத்தை நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகிறார்கள் அதே மட்டும் இல்லாமல் இப்பவே இந்த படத்தின் ஹிந்தி உரிமம் அதிகவிலைக்கு விற்று இருக்கிறது அதாவது டப்பிங் ரைட்ஸ் மட்டும், இன்னும் ரீமேக் எல்லாம் கொடுக்கவில்லையாம்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழில் மட்டுமின்றி, இந்தியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. விவேகம் படத்தின் இந்திப் பதிப்பிற்கான உரிமை 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவேகம் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளதால், இந்தியிலும் இப்படம் மாஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் பில்லா, மங்காத்தா, என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய தமிழ் படங்கள் இந்தியில் டப்பிங் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply