Thursday, November 19
Shadow

புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை… ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’!

புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை… ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாளே’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல், திருமணம், கணவன் – மனைவி இடையிலான அன்பு என புதுமணத் தம்பதிகளின் அழகான வாழ்க்கையை மென்மையான மெலடி மூலம் சொல்லியிருக்கிறது இந்தப் பாடல்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரா. வெங்கட் இயக்கும் இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். ஹரிசரண், சைந்தவி, நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ பாடல் அப்பா – மகன் இடையிலான பாசத்தையும் உணர்வுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. அந்தப் பாடலைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ முற்றிலும் வேறுபட்ட உணர்வைத் தருகிறது. புதிதாகத் திருமணமான தம்பதிகளின் காதல், சின்னச் சின்ன சந்தோஷங்கள், ஒருவருக்கொருவர் காட்டும் அக்கறை என அவர்களின் இல்லற வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்துள்ளது.

இந்தப் பாடலின் காட்சிகள் வெறும் காதல் பாடலாக மட்டும் இல்லாமல், படத்தின் கதையையும் அடுத்தடுத்த நிகழ்வுகளையும் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கும் வகையில் அமைந்துள்ளன. லாரி ஓட்டுநராக இருக்கும் ஜீவாவுக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஜிஷா விஜயனுக்கும் இடையே காதல் மலர்கிறது. குடும்பத்தினரின் எதிர்ப்பைத் தாண்டி கோயிலில் திருமணம் செய்துகொள்ளும் இருவரும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள சிறிய கிராமத்து வீட்டில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

அதன்பிறகு அவர்களுக்குள் மலரும் காதல், அன்றாட வாழ்க்கையில் நிகழும் அழகான தருணங்கள், கர்ப்பமடையும் மகிழ்ச்சி என அவர்களது வாழ்க்கைப் பயணம் பாடல் முழுவதும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களும் கதையின் அடுத்த கட்டம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.

காதல் காட்சிகளை அளவுக்கு மீறிய கவர்ச்சி இல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் உருவாக்கியிருப்பது இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு. குறிப்பாக, ஒரு பாடலின் வழியாகவே கதாபாத்திரங்களின் பின்னணி, அவர்களின் உறவு மற்றும் கதையில் ஏற்படப்போகும் முக்கியமான மாற்றங்களைச் சொல்லியிருப்பது கவனம் பெறுகிறது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’ திரைப்படம், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனிதர்களின் உணர்வுகளைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுமையான கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

டிசம்பர் 24-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘தகப்பன்’ படத்தின் மீது ஏற்கெனவே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அப்பா – மகன் பாசத்தைச் சொல்லும் முதல் பாடலைத் தொடர்ந்து, கணவன் – மனைவி காதலை மையமாகக் கொண்ட இரண்டாவது பாடலும் வெளியாகியிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

‘சொக்க வச்சாளே’ பாடலை இங்கே காணலாம்:

 

From Newlywed Romance to Life’s Unexpected Turns: Jiiva’s ‘Thagappan’ Unveils Its Beautiful Second Single ‘Sokka Vachaale’!

The makers of actor Jiiva’s upcoming film ‘Thagappan’ have released the film’s second single, ‘Sokka Vachaale’. Featuring a soothing melody, the song beautifully captures the love, romance and everyday happiness shared by a newly married couple.

Produced by Lark Studios and directed by Ra. Venkat, the film has music composed by Marshall Robinson. Mohan Rajan has penned the lyrics, while Haricharan, Saindhavi and Narayanan Ravishankar have lent their voices to the song.

While the film’s first single, ‘Thangapulla’, explored the emotional bond and affection between a father and his son, the newly released ‘Sokka Vachaale’ takes a different route by focusing on the romantic relationship between a husband and wife. With its gentle musical arrangement and pleasant melody, the song brings out the warmth, intimacy and little moments of happiness that define married life.

More than just a romantic track, ‘Sokka Vachaale’ also offers glimpses into the film’s storyline. Jiiva plays a lorry driver who falls in love with a woman from a relatively affluent family, portrayed by Rajisha Vijayan. Despite opposition from her parents, the couple gets married in a temple and begins their new life in a small house in a village on the outskirts of town.

The song takes viewers through their journey as newlyweds, capturing their everyday romantic moments, affection for each other and the happiness of discovering that they are expecting a child. However, phone calls from the heroine’s mother gradually bring about subtle changes in their otherwise happy life, hinting at developments that could influence the course of the story.

One of the interesting aspects of the song is the way it uses its visuals to establish the characters’ relationship while also revealing important developments in the narrative. The romantic sequences have been presented tastefully, making the song enjoyable for audiences across all age groups without relying on unnecessary glamour.

Set against the backdrop of Madurai and its surrounding regions, ‘Thagappan’ revolves around family relationships, father-son bonding and human emotions. After ‘Thenavattu’, Jiiva returns to a predominantly rural setting with this film, which features Rajisha Vijayan as the female lead.

Produced by K. Kumar, the film has cinematography by M. Sukumar, while Nagooran Ramachandran is handling the editing.

Think Music has acquired the audio rights of the film. Interestingly, even before the film’s completion, Zee Tamil has secured its satellite rights, while ZEE5 has acquired its OTT streaming rights.

Scheduled for a theatrical release on December 24, ‘Thagappan’ has already generated considerable interest among audiences. Following the emotional appeal of ‘Thangapulla’, the second single ‘Sokka Vachaale’ offers a refreshing glimpse into the romantic side of the film, further building anticipation for Jiiva’s upcoming release.

Watch ‘Sokka Vachaale’ here: