‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நேற்று காலை படத்தின் அதிகாரப்பூர்வமற்ற டீசர் சமூக வலைதளங்களில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை ‘2.0’ டீம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.