Monday, December 2
Shadow

Tag: #SuperStar

ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

Latest News, Top Highlights
'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. நாளை (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது இந்த படம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படக்குழு. 'தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்....
மிரட்டலான ‘2.0’ மேக்கிங் வீடியோ ஒரு பார்வை

மிரட்டலான ‘2.0’ மேக்கிங் வீடியோ ஒரு பார்வை

Latest News, Top Highlights
‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று காலை படத்தின் அதிகாரப்பூர்வமற்ற டீசர் சமூக வலைதளங்களில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை ‘2.0’ டீம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. https://youtu.b...
காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந...
ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ?? ஒரு ரசிகனின் வரிகள்…

ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ?? ஒரு ரசிகனின் வரிகள்…

Latest News, Top Highlights
நான் ரஜினியைத் தொடர்ந்து ஆதரித்து எழுதி வருவதைப் பார்த்த சில பேர், இவன் ஒரு படித்த முட்டாள், நடிகர்கள் பின்னால் செல்பவன் என்று தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் கூறி வருகிறார்கள்.. இவர்களுக்கான பதிவு தான் இது. நான் ஒரு படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள். என்னவோ ரஜினிக்கு எதிராக களத்தில் காமராஜரும், அண்ணாதுரையும் இருப்பதை போலவும், நான் அவர்களை விட்டு விட்டு ரஜினியை ஆதரிப்பது போலவும் கூறி வருகிறார்கள். களத்தில் ரஜினியோடு நிற்கும் ஒரே ஒரே தலைவராவது, உழைத்து சம்பாதித்து கட்சி நடத்துபவராக இருக்கிறாரா?(நடிகர்களைத் தவிர). நல்லகண்ணு அய்யா இருக்கிறாரே?? என்று கூறுவார்கள். கடைசியாக அவருடைய இடதுசாரி இயக்கம், தேர்தலில் நிற்க அவருக்கு சீட்டு கொடுத்தது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா? இடதுசாரி இயக்கம் முதலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் தயாரா? ஏண்டா? தேர்தலியே நிற்காத ஒருவரை எப்படி ஆதரிக்க ...
தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி 2’ உருவாகி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன், நாகார்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. "முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவரால் நடிக்க முடியாததால், தெலுங்கில் மற்றொரு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிய...
ரஜினியுடன், தமிழரசன் சந்திப்பு…  தலித் அரசியல் குறித்து விவாதம்!

ரஜினியுடன், தமிழரசன் சந்திப்பு… தலித் அரசியல் குறித்து விவாதம்!

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த மாதம் அறிவித்தார். அதிலிருந்து பல கட்சித் தலைவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் தமிழரசன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது குறித்து பேசிய தமிழரசன், ‘ அடித்தட்டு மக்களிடம் ​செல்வாக்கை பெற்றவர் ரஜினி. மக்களுக்கு உழைக்க ரஜினி அதிக ஆர்வத்துடன் உள்ளார். தலித் அரசியல் குறித்து ரஜினியுடன் பேசினேன்.’ என்று கூறீனார்....
ரஜினியின் ‘ட்ரெண்டிங்’ வார்த்தை பாடலானது!

ரஜினியின் ‘ட்ரெண்டிங்’ வார்த்தை பாடலானது!

Latest News, Top Highlights
கடந்த மாதம் 31ஆம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது தனது அரசியல் பிரவேசத்தையும் அறிவித்தார். அதற்கு முன் மீடியாக்களைப் பார்த்துதான் தனக்குப் பயம் என்று தெரிவித்தார். அப்போது, ‘ரெண்டு நாளைக்கு முன்னாடி கார்ல போகும்போது மைக்கை நீட்டி, ‘உங்க கொள்கைகள் என்ன?’னு ஒருத்தர் கேட்டார். என்னது கொள்கைகளா? எனக்கு ரெண்டு நிமிஷம் தலை சுத்திருச்சு…’ என்றார். ரஜினியின் இந்த வார்த்தையைக் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். ‘எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்பது இந்திய அளவில் சில நாட்களுக்கு முன்பு டிரெண்டானது. இந்நிலையில், இந்த வார்த்தையை வைத்து ஒரு பாடல் உருவாகியுள்ளது. சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தாதா 87’. விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ என்ற பாடலை புரோமோ பாடலாக எழ...
தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. உருகிய ரஜினி!!

தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. உருகிய ரஜினி!!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பேசியதாவது… என் அரசியல் அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எப்படி கையாள்வது என்றே எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் 2 மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டியளித்தேன். என் அரசியல் பணிக்கு ஊடகங்களின் உதவி தேவை. நம் எல்லோருக்கும் கடமை உள்ளது. மிகப்பெரிய புரட்சி எல்லாம் தமிழகத்தில் இருந்து தான் துவங்கியுள்ளது. விரைவில் உங்களை சந்தித்து கட்சி கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்....
நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ராகவேந்...
அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது நாளாக சந்தித்து வருகிறார். ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என்று கூறினார்....