Wednesday, June 24
Shadow

பழமையான கேமராவை சுற்றி உருவாகும் ஃபேண்டஸி காமெடி – முனீஸ்காந்த் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பழமையான கேமராவை சுற்றி உருவாகும் ஃபேண்டஸி காமெடி – முனீஸ்காந்த் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

சென்னையில் ஒரு புதிய திரைப்பட முயற்சி உற்சாகமாக துவங்கியுள்ளது. ஜே பி சினிமாஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து, அந்த முயற்சியின் தொடக்க விழாவை சிறப்பாக நடத்தி உள்ளது. தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் முனீஸ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்குகிறார். திரைப்படத்தின் பூஜை விழாவில் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் முனீஸ்காந்த் உடன் ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா மற்றும் அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழுவிலும் பல அனுபவசாலிகள் இணைந்துள்ளனர். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இசையை ஆனந்த் காசிநாத் அமைக்கிறார். படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை வி. சண்முகராஜா கவனிக்க, சண்டைக் காட்சிகளை ராம் குமார் வடிவமைக்கிறார். ஆடை வடிவமைப்பை ஸ்ரீ நிஷா பாலாஜி மேற்கொள்கிறார். நடன அமைப்பை சந்ததோஷ் கையாளுகிறார்.

இந்தப் படம் சாதாரண காமெடி படமாக இல்லாமல், ஒரு பழமையான கேமராவை மையமாகக் கொண்டு உருவாகும் ஃபேண்டஸி காமெடி கதையாக இருக்கும் என இயக்குநர் அசோக் ராம் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், வித்தியாசமான கதையுடன் ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையுடன் படக்குழு பணிகளை தொடங்கியுள்ளது.

Fantasy Comedy Based on an Ancient Camera – Munishkanth’s New Film Launched with a Grand Pooja!

A new film project has been officially launched in Chennai with much enthusiasm. JP Cinemas has begun its first production venture, and the film’s launch ceremony was held in a grand manner. The movie is being produced by Jayakumar and Preethi under the banner of JP Cinemas, with Munishkanth playing the lead role.

The film is directed by debutant director Ashok Ram. Filmmaker Nithilan Swaminathan, known for the film Maharaja, attended the launch event as the chief guest and conveyed his wishes to the entire team.

The yet-to-be-titled film features a talented ensemble cast including Munishkanth, Redin Kingsley, Balaji Sakthivel, Vivek Prasanna, Kalki, Jensen Divakar, Vinoth Munna, and Ananya Rao in important roles.

The technical team also includes several experienced professionals. The cinematography is handled by Sridhar Subramani. Music is composed by Anand Kasinath. Editing is done by N. P. Srikanth, while art direction is by V. Shanmugaraja. Action choreography is by Ram Kumar. Costume design is handled by Sri Nisha Balaji, and choreography is by Sandathosh.

Speaking about the film, director Ashok Ram said that the story revolves around an ancient camera and will be presented in the fantasy comedy genre. A grand set has been constructed in Chennai where the film’s shooting will take place.

As the first production venture of JP Cinemas, the team has begun the project with great confidence, hoping the film’s unique concept will entertain audiences.