Sunday, June 7
Shadow

வாலிபாலை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் படம்; பவிஷ் – அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்’ கவனம் ஈர்ப்பு!

வாலிபாலை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் படம்; பவிஷ் – அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்’ கவனம் ஈர்ப்பு!

தமிழ் சினிமாவில் கிரிக்கல், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்கள் வெளியாகியிருந்தாலும், வாலிபாலை பிரதான கதைக்களமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் இதுவரை இல்லாத நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாக உருவாகி வருகிறது ‘அட்டாக்கர்’.

இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் நடிகை குஷ்பு – இயக்குநர் சுந்தர் சி தம்பதியரின் மகள் அவந்திகா சுந்தர் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிமுக வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Zinema Media and Entertainment Limited நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாக உருவாகும் ‘அட்டாக்கர்’, விளையாட்டை மட்டும் மையப்படுத்தாமல் அதனோடு இணைந்துள்ள சமூக வாழ்க்கை, கலாச்சார அடையாளம் மற்றும் உணர்வுபூர்வமான உறவுகளையும் பேசும் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் இயக்குகிறார். இவர் முன்னதாக இயக்குநர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். வாலிபால் விளையாட்டின் உண்மைத்தன்மையை திரையில் கொண்டு வருவதற்காக இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், கதாநாயகர்களான பவிஷ் மற்றும் அவந்திகா உள்ளிட்ட நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆறு மாதங்களுக்கு மேலாக தொழில்முறை பயிற்சியில் ஈடுபட்டு வாலிபால் நுணுக்கங்களை கற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குஷ்பு – சுந்தர் சி தம்பதியரின் மகளான அவந்திகா சுந்தர், இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள படப்பிடிப்புடன், ‘அட்டாக்கர்’ தற்போது தயாரிப்பு பணிகளில் வேகமெடுத்து வருகிறது. ‘லவ் ஓ லவ்’, ‘ரீமேட்ச்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை முன்னிறுத்தி வரும் Zinema Media and Entertainment Limited, புதிய இயக்குநர்கள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருவதாக தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு, இளைய தலைமுறை கனவுகள், கலாச்சார அடையாளம் மற்றும் உணர்வுபூர்வமான மனித உறவுகளை இணைத்து உருவாகும் ‘அட்டாக்கர்’, தமிழ் சினிமாவில் வாலிபால் விளையாட்டுக்கு புதிய அடையாளத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகில் எழுந்துள்ளது.

 

‘Attacker’ Draws Attention as Tamil Cinema’s First Volleyball-Centric Film; Pavish and Avantika Team Up

While Tamil cinema has previously explored sports such as cricket, football, and kabaddi, there has never been a feature film built entirely around volleyball. Filling that gap is “Attacker,” a sports drama that is already generating interest for its unique theme and fresh casting.

The film stars Pavish, Dhanush’s nephew, alongside Avantika Sundar, daughter of actress Khushbu Sundar and actor-director Sundar C. The recently released introduction video has received a positive response from audiences and film enthusiasts alike.

Produced by Zinema Media and Entertainment Limited, “Attacker” marks the company’s third production venture. Beyond being a sports film, the project aims to explore the emotions, social realities, and cultural identity associated with volleyball, offering a deeper narrative rooted in the sport.

The film is written and directed by debutant Thamo Nagabooshanam, who previously worked as an associate director with acclaimed filmmaker Pa. Ranjith. To ensure authenticity, several leading Indian volleyball players have been cast in key roles, bringing real-life sporting experience to the screen.

Adding to the film’s credibility, lead actors Pavish and Avantika, along with other cast members, underwent more than six months of intensive training with professional volleyball players to prepare for their roles.

“Attacker” also marks the Tamil cinema debut of Avantika Sundar as a leading actress, making the project a significant milestone in her career and adding further curiosity around the film.

Principal photography is set to take place across major locations in South India, with production progressing steadily. Following projects such as “Love O Love” and “Rematch,” Zinema Media and Entertainment Limited continues its commitment to supporting distinctive storytelling, emerging filmmakers, and promising new talent.

With its blend of sport, youth aspirations, cultural identity, and emotional storytelling, “Attacker” is shaping up to be one of the most distinctive upcoming films in Tamil cinema. Industry observers are already watching closely to see whether the film can establish a new space for volleyball on the big screen.