Monday, July 27
Shadow

இந்திய கால்பந்து ரசிகர்களை குறிவைக்கும் ZEE5… FIFA உலகக் கோப்பையுடன் பாய்சுங் பூட்டியா களமிறங்குகிறார்!

இந்திய கால்பந்து ரசிகர்களை குறிவைக்கும் ZEE5… FIFA உலகக் கோப்பையுடன் பாய்சுங் பூட்டியா களமிறங்குகிறார்!

 

இந்தியாவில் கால்பந்து ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், FIFA World Cup 2026 போட்டிகளை முன்னிட்டு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்கள் ரசிகர்களை கவரும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், ZEE5 தனது கால்பந்து உள்ளடக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய கால்பந்தின் அடையாளமாக விளங்கும் பாய்சுங் பூட்டியாவை நிபுணர் குழுவில் இணைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாகக் கருதப்படும் FIFA World Cup 2026 போட்டிகளை இந்திய ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு செல்லும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. ஜூன் 11 முதல் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பு, முக்கிய தருணங்களின் ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக நிகழ்ச்சிகளை ZEE5 வழங்கவுள்ளது.

இந்திய கால்பந்து வரலாற்றில் முக்கியமான இடம் பெற்றுள்ள பாய்சுங் பூட்டியா, தனது அனுபவம் மற்றும் விளையாட்டு அறிவின் மூலம் ரசிகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வுகளையும் சுவாரஸ்யமான பார்வைகளையும் வழங்க உள்ளார். அவரது வருகை, கால்பந்து ரசிகர்களிடையே போட்டிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த இணைப்பு குறித்து பேசிய பாய்சுங் பூட்டியா, “FIFA World Cup என்பது வெறும் விளையாட்டு போட்டி மட்டுமல்ல; பல தலைமுறை ரசிகர்களின் கனவுகளையும் உணர்வுகளையும் இணைக்கும் ஒரு உலகளாவிய கொண்டாட்டம். அந்த அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் கால்பந்தின் வளர்ச்சிக்கு இது மேலும் ஒரு முக்கியமான படியாக இருக்கும்,” என்றார்.

ZEE5 மற்றும் Unite8 தளங்கள் மூலம் FIFA World Cup 2026 போட்டிகள் ஆங்கிலம், இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்பட உள்ளன. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த மொழியில் போட்டிகளை ரசிக்க முடியும்.

மேலும், இந்த ஒப்பந்தம் FIFA World Cup 2030, FIFA Women’s World Cup 2027 உள்ளிட்ட பல்வேறு முக்கிய FIFA தொடர்களையும் உள்ளடக்கிய நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைந்துள்ளது. இதன் மூலம் உலக கால்பந்தை இந்திய ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதோடு, நாட்டில் கால்பந்து ரசிகர் வட்டாரத்தின் வளர்ச்சிக்கும் புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. :::

 

ZEE5 Targets India’s Growing Football Fanbase; Bhaichung Bhutia Joins FIFA World Cup 2026 Coverage Team

Mumbai:

With the number of football fans in India steadily rising, digital streaming platforms are stepping up their efforts to engage audiences ahead of the FIFA World Cup 2026. In a significant move, ZEE5 has announced the inclusion of Indian football legend Bhaichung Bhutia in its expert panel, further strengthening its football content offerings.

The development is being viewed as a strategic effort to bring the excitement of the world’s biggest football tournament closer to Indian audiences. Beginning June 11, ZEE5 will stream live matches, highlights, and exclusive content related to the FIFA World Cup 2026.

Widely regarded as one of the most influential figures in Indian football history, Bhaichung Bhutia is expected to offer expert analysis, unique insights, and a deeper understanding of the game for viewers throughout the tournament. His association is likely to further boost excitement among football enthusiasts across the country.

Speaking about the collaboration, Bhutia said, “The FIFA World Cup is more than just a sporting event; it is a global celebration that inspires generations and brings people together through a shared passion. I am delighted to be part of this journey and look forward to connecting fans with the stories, emotions, and unforgettable moments that make the tournament so special. At a time when football continues to grow rapidly in India, this presents a wonderful opportunity to strengthen the bond between the sport and its fans.”

The FIFA World Cup 2026 will be available on ZEE5 and Unite8 in multiple languages, including English, Hindi, Bengali, and Malayalam, enabling fans across different regions to enjoy the action in their preferred language.

The partnership also marks the beginning of a long-term collaboration covering several major FIFA properties, including the FIFA World Cup 2030 and the FIFA Women’s World Cup 2027. Through this initiative, ZEE5 and Unite8 aim to bring global football closer to millions of Indian viewers while contributing to the continued growth of football fandom in the country.