
‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை மேலும் சிறப்பித்த விஷ்ணு விஷால் – சூரி நட்பு… மதுரையில் ரசிகர்களை நெகிழ வைத்த இனிய தருணம்!
‘படத்தை ஊரே கொண்டாடுகிறது’ – வீடியோ கால் மூலம் ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி; ரசிகர்களிடம் வைரலாகும் நட்பின் அழகிய தருணம்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள, இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், ஜூலை 3 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் கொண்டாடப்படும் இந்த வெற்றி, படக்குழுவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் நோக்கில், கதாநாயகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் மதுரைக்கு சென்றிருந்தனர்.
மதுரை பயணத்தின் போது, நடிகர் சூரிக்குச் சொந்தமான புகழ்பெற்ற ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவினர் மதிய உணவருந்தினர். அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்த நடிகர் சூரி, வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உரையாடி, படத்தின் வெற்றிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
உற்சாகமாக பேசிய சூரி, “படத்தின் வெற்றிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் அன்பும் பாராட்டும்,” என்று கூறியதுடன், படக்குழுவினரின் மகிழ்ச்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் விஷ்ணு விஷால் – சூரி நட்பின் ஆழத்தை வெளிப்படுத்திய இந்த இயல்பான உரையாடல், அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. வெற்றியையும் நட்பையும் ஒருசேர கொண்டாடிய இந்த தருணம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது வசூல் மட்டுமல்ல; அதில் இணைந்த கலைஞர்களின் அன்பும், பரஸ்பர மரியாதையும், உண்மையான நட்பும் அந்த வெற்றியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில், முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் ஜாராவும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார்.
முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’, திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக தொடர்ந்து தனது வெற்றி பயணத்தை முன்னெடுத்து வருகிறது.

Vishnu Vishal and Soori’s Heartwarming Friendship Wins Hearts as Viral Video Celebrates the Success of ‘Gatta Kusthi 2’
Soori surprises the ‘Gatta Kusthi 2’ team with a heartfelt video call from abroad as Vishnu Vishal and director Chella Ayyavu visit his Amman Restaurant in Madurai
The blockbuster success of ‘Gatta Kusthi 2’, produced by Vels Film International in association with Vishnu Vishal Studios, continues to create memorable moments both on and off the screen. Starring Vishnu Vishal and Aishwarya Lekshmi, and directed by Chella Ayyavu, the film has been receiving an overwhelming response from audiences since its worldwide theatrical release on July 3.
As part of the film’s ongoing success celebrations, actor Vishnu Vishal and director Chella Ayyavu have been travelling across Tamil Nadu, meeting audiences in various cities and personally thanking fans for their immense love and support.
During their visit to Madurai, the team stopped for lunch at Amman Restaurant, the popular eatery owned by actor Soori. Although Soori was away from India, he made the occasion special by connecting with Vishnu Vishal and Chella Ayyavu through a surprise video call.
Congratulating the team, Soori said, “My heartfelt congratulations on the film’s success. The entire town is celebrating the movie. My best wishes to everyone who worked on the film.” His warm words and genuine happiness added to the celebratory atmosphere, making the moment even more memorable.
The emotional exchange beautifully reflected the long-standing friendship between Vishnu Vishal and Soori. Their camaraderie, mutual respect, and affection touched everyone present and quickly became a talking point among fans.
The video has since gone viral across social media platforms, with audiences praising the duo’s enduring friendship and the genuine bond they continue to share beyond cinema.
The success of Gatta Kusthi 2 has been further amplified by such heartfelt moments, reminding fans that strong friendships and mutual appreciation remain an integral part of the film industry.
Reuniting the much-loved lead pair from the first installment, Vishnu Vishal and Aishwarya Lekshmi once again headline the sequel. The film also features Karunas, Kaali Venkat, Munishkanth, Gajaraj, and others in pivotal roles, while child artiste Zara delivers a notable performance.
Produced on a grand scale by Vels Film International and Vishnu Vishal Studios, the sequel has Subra, Aryan Ramesh, and Ishan Saxena serving as co-producers.
With packed theatres, positive word-of-mouth, and enthusiastic audience response, ‘Gatta Kusthi 2’ continues its successful theatrical run, emerging as one of the most celebrated family entertainers of the season.
