
பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட அபாயங்களை பேசும் ‘தி இந்தியா ஸ்டோரி’ – காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே நடிப்பில் டிரெய்லர் வெளியீடு!
சென்னை: சமூகத்தில் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்து வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மற்றும் அதன் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விவசாயத்தில் அதிகரித்து வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு, அதன் காரணமாக மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால தலைமுறைகள் சந்திக்கும் அபாயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண பிரச்சினையாக கருதப்படும் இந்த விவகாரத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளை தைரியமாக வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சிக்கும் படைப்பாக ‘தி இந்தியா ஸ்டோரி’ அமைகிறது.
வெளியான டிரெய்லர், உண்மையை வெளிக்கொணரும் போராட்டம், அதிகார அமைப்புகளுக்கு எதிரான சவால்கள், நீதிக்கான தேடல் மற்றும் மனிதாபிமானத்தின் அவசியம் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக பதிவு செய்கிறது. அதிரடி, உணர்ச்சி, சமூகப் பொறுப்பு மற்றும் சிந்திக்க வைக்கும் தருணங்கள் இணைந்திருப்பதால், படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Zee Studios வழங்கி, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சேட்டன் டி.கே. இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருப்பவர் சாகர் பி. ஷிண்டே. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் சேட்டன் டி.கே. கூறுகையில், “இது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒரு விவாதத்தை தொடங்கும் முயற்சி. அனைவரின் வாழ்க்கையையும் அமைதியாக பாதித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினையை திரைமூலம் பேச விரும்பினோம். இந்தப் படம் பார்வையாளர்களை சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தூண்டும் என நம்புகிறேன்,” என்றார்.
நடிகை காஜல் அகர்வால் கூறுகையில், “உண்மைக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை சொல்லும் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.
நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறுகையில், “நம்பிக்கை மற்றும் உறுதியுடன் போராடும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை இப்படம் பதிவு செய்கிறது. அதன் உணர்வுகளும் கருத்தும் பார்வையாளர்களை ஆழமாக சென்றடையும்,” என்று தெரிவித்தார்.
இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி, அனிதா ஜாதவ், விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல் வரிகளை ஷகீல் அசாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே மேற்கொண்டுள்ளனர்.
சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் கருத்துடன் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்’, பொழுதுபோக்கைத் தாண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாக உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The India Story Trailer Highlights the Hidden Dangers of Pesticide Farming; Kajal Aggarwal and Shreyas Talpade Lead a Powerful Social Drama
Chennai: The official trailer of The India Story: Slow Poison in Progress, a socially relevant film that sheds light on the long-ignored dangers of pesticide-based farming and its far-reaching consequences, has been unveiled. Starring Kajal Aggarwal and Shreyas Talpade in lead roles, the film aims to spark conversations about one of the most pressing issues affecting public health and the environment.
The film explores the widespread use of chemical pesticides in agriculture and examines their impact on human health, ecosystems, and future generations. Through a gripping narrative, The India Story seeks to expose hidden truths while raising awareness about a crisis that often goes unnoticed despite affecting millions of lives.
The trailer offers an intense glimpse into a story driven by truth, justice, and resilience. Combining emotional depth with powerful performances, it follows the journey of individuals who challenge an entrenched system in their pursuit of accountability. With its socially conscious theme and engaging storytelling, the film has already generated considerable interest among audiences.
Presented by Zee Studios in association with MIG Production & Studios, The India Story is directed by Chettan DK and written and produced by Sagar B. Shinde. The film is scheduled for a worldwide theatrical release on July 24, 2026, in Hindi, Tamil, and Telugu.
Speaking about the trailer, director Chettan DK said, “The India Story is more than just a film—it is a conversation that society needs to have. We wanted to bring attention to an issue that silently affects every household. We hope the film encourages audiences to think, question, and engage with the reality around them.”
Sharing her experience, Kajal Aggarwal said, “Playing a character who stands firmly for the truth despite overwhelming challenges has been a deeply meaningful experience. I’m proud to be part of a film that carries such a strong social message.”
Shreyas Talpade added, “The film tells the story of an ordinary individual taking on an extraordinary challenge with hope and determination. I believe audiences will connect with its emotions and powerful message.”
The film is co-produced by Swati Vinayak Saindane, Anita Jadhav, Vinayak Saindane, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi. The technical crew includes cinematographer Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave.
Blending compelling storytelling with an important social message, The India Story: Slow Poison in Progress is positioned as a thought-provoking cinematic experience that goes beyond entertainment, encouraging audiences to reflect on the hidden consequences of pesticide farming when it arrives in theatres worldwide on July 24, 2026.
