‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு: 2027 சங்கராந்திக்கு திரைக்கு வரும் சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட ஆக்ஷன் படம்
‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு (SYG)’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கும் இப்படம், வரும் 2027 ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகை வெளியீடாக திரைக்கு வருகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பிரம்மாண்டமான காட்சிகள், வலுவான உணர்வுகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் வகையில் இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
படத்தின் புதிய போஸ்டர் சாய் துர்கா தேஜின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ரத்தக் காயங்களுடன், கையில் ஆயுதம் ஏந்தியபடி, சுற்றிலும் தீப்பிழம்புகள் சூழ்ந்திருக்க ஆக்ரோஷமான தோற்றத்தில் அவர் இடம்பெற்றுள்ளார். எரியும் கட்டிடங்கள், புகை மற்றும் பதற்றம் நிறைந்த பின்னணி ஆகியவை படத்தின் ஆக்ஷன் உலகத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.
ஏற்கனவே வெளியான ‘அசுர ஆகமன’ முன்னோட்டக் காட்சி மற்றும் படத்தின் விளம்பரப் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, ‘சம்பராலா ஏடி கட்டு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் காட்சி அமைப்பு, தொழில்நுட்ப நேர்த்தி மற்றும் ஆக்ஷன் காட்சிகளை மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதுடன், பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பது படக்குழுவுக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
சாய் துர்கா தேஜ் இதுவரை பார்க்காத வகையிலான தீவிரமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆக்ஷனுடன் உணர்வுப்பூர்வமான கதை மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளை இணைத்து இயக்குநர் ரோஹித் கே.பி. இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தின் பான் இந்தியா அளவிலான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ளா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை வெற்றி பழனிச்சாமி மேற்கொண்டுள்ள நிலையில், பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். நவின் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பையும், காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷ்மண், கேத்தன், ப்ருத்வி ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளுக்கான சண்டைப் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆடை வடிவமைப்பை ஆயிஷா மரியம் கவனித்துள்ளார்.
‘சம்பராலா ஏடி கட்டு (SYG)’ – தொழில்நுட்பக் குழு
எழுத்து & இயக்கம் – ரோஹித் கே.பி.
தயாரிப்பாளர்கள் – கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம் – பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவு – வெற்றி பழனிச்சாமி
இசை – பி. அஜனீஷ் லோக்நாத்
படத்தொகுப்பு – நவின் விஜய் கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பு – காந்தி நதிக்குடிகர்
சண்டைப் பயிற்சி – பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷ்மண், கேத்தன், ப்ருத்வி
ஆடை வடிவமைப்பு – ஆயிஷா மரியம்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஹாஷ்டாக் மீடியா
நடிகர்கள்: சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ளா.
வெளியீடு: 12 ஜனவரி 2027 – சங்கராந்தி பண்டிகை

Sai Durgha Tej’s ‘Sambarala Yeti Gattu (SYG)’ Wraps Up Shoot; Set for Sankranthi Release on January 12, 2027
‘Mega Supreme Hero’ Sai Durgha Tej’s much-awaited Pan-India action drama ‘Sambarala Yeti Gattu (SYG)’ has successfully completed its entire shooting schedule. Directed by debutant Rohith KP and produced by K Niranjan Reddy and Chaitanya Reddy under the prestigious Primeshow Entertainment banner, the film is now progressing rapidly through its post-production works.
The makers have officially announced that ‘Sambarala Yeti Gattu (SYG)’ will arrive in theatres on January 12, 2027, coinciding with the Sankranthi festival. With the film gearing up for a festive release, expectations surrounding this ambitious Pan-India project are set to rise further.
A newly unveiled poster gives a glimpse of Sai Durgha Tej’s intense and rugged avatar in the film. Covered in blood and bruises, the actor is seen holding a weapon and walking fearlessly amid a fiery backdrop. Burning structures, thick smoke and an atmosphere charged with tension hint at a world packed with conflict and high-octane action.
The film has already generated significant buzz following the positive response to the ‘Asura Aagamana’ glimpse and other promotional material. With the shooting now wrapped up, the team has shifted its complete focus to post-production, particularly the film’s technical, visual and action elements, with the aim of delivering a grand theatrical experience.
Mounted on a lavish scale, ‘Sambarala Yeti Gattu’ has been filmed across multiple locations. Elaborate sets and large-scale action sequences form a major part of the film’s visual canvas. The completion of the shoot marks a significant milestone in the journey of this ambitious project.
Sai Durgha Tej is set to portray a powerful and intense character that promises to present him in a completely different avatar. Director Rohith KP is said to be combining strong emotional elements with spectacular visuals and adrenaline-pumping action to create an engaging cinematic experience.
Adding to the film’s Pan-India appeal, a leading Bollywood actor is playing a crucial role in the story. Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth and Ananya Nagalla are also part of the ensemble cast and will be seen in prominent roles.
The film boasts an accomplished technical crew. Vetri Palanisamy is handling the cinematography, while B Ajaneesh Loknath is composing the music. Nawin Vijay Krishna is the editor and Gandhi Nadikudikar serves as the production designer. The high-octane action sequences have been choreographed by renowned fight masters Peter Heins, Ram Lakshman, Chethan and Prudhvi. Ayesha Mariam is the costume designer.
‘Sambarala Yeti Gattu (SYG)’ – Cast & Crew
Cast: Sai Durgha Tej, Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth, Ananya Nagalla
Writer & Director: Rohith KP
Producers: K Niranjan Reddy, Chaitanya Reddy
Banner: Primeshow Entertainment
DOP: Vetri Palanisamy
Music: B Ajaneesh Loknath
Editor: Nawin Vijay Krishna
Production Designer: Gandhi Nadikudikar
Fights: Peter Heins, Ram Lakshman, Chethan, Prudhvi
Costume Designer: Ayesha Mariam
PRO: Yuvraaj
Marketing: Haashtag Media
‘Sambarala Yeti Gattu (SYG)’ releases in theatres on January 12, 2027, for Sankranthi.
