
துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்!
‘அஞ்சக்கல்லக்கொக்கன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் உல்லாஸ் செம்பன், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியிருக்கும் ‘டிஸ்கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன், ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்ற செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது ‘டிஸ்கோ’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் கதையையும் திரைக்கதையையும் செம்பன் வினோத் ஜோஸ் எழுதியுள்ளார்.
செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸுடன் தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சாகர் சூர்யா, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஃபெமினா ஜார்ஜ், கல்யாணி அணில், மீரா வாசுதேவன், காயத்ரி சுரேஷ், செந்தில் கிருஷ்ணா, மணிகண்டன் ஆச்சாரி, அப்பானி சரத், சினோஜ் வர்கீஸ் மற்றும் வினீத் தட்டில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், படத்தின் ஆக்ஷன் உலகத்தைப் பற்றிய ஒரு தெளிவான அறிமுகத்தை கொடுக்கிறது. கருப்பு உடையில், கையில் துப்பாக்கிகளுடன் கதாபாத்திரங்கள் அனைவரும் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர், வழக்கமான ஆக்ஷன் படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு ஸ்டைலிஷ் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக, படத்தின் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ள துப்பாக்கி வடிவமைப்பும், போஸ்டரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் தோற்றமும் ‘டிஸ்கோ’வில் துப்பாக்கிச் சண்டைகள் மற்றும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை உணர்த்துகின்றன.
ஆக்ஷனை மையமாகக் கொண்ட அதிரடியான கதைக்களத்துடன், சர்வதேச தரத்திலான காட்சியமைப்பை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டிஸ்கோ’, மலையாள சினிமாவில் புதிய வகை ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் படமாக உருவாகியுள்ளது.
படத்திற்கு ஆர்மோ ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன் அய்யப்பா இசையமைக்க, ரோஹித் V.S. வாரியத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கோகுல் தாஸ் கலை இயக்கத்தையும், கலை கிங்சன் சண்டைப்பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர். மெல்வி J ஆடை வடிவமைப்பையும், ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனையையும் கவனித்துள்ளனர். ஐடென்ட் லேப்ஸ் VFX பணிகளை மேற்கொண்டுள்ளது.
ஐகான் சினிமாஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது.
பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்திருப்பதுடன், வித்தியாசமான ஆக்ஷன் அணுகுமுறையையும் கொண்டுள்ள ‘டிஸ்கோ’ திரைப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Guns, Action and Style: ‘DISCO’ First Look Promises a High-Voltage Entertainer
Director Ullas Chemban, who made his mark with Anchakkallakokkan, is gearing up for his next ambitious venture, DISCO. The makers have unveiled the film’s first-look poster, offering a glimpse into a stylish and action-packed world. The film is set to release worldwide in theatres on November 6.
DISCO brings together actor-writer Chemban Vinod Jose and Antony Varghese once again after their successful collaboration in Angamaly Diaries. Chemban Vinod Jose has penned the screenplay for the film.
Produced jointly by Sembosky Motion Pictures and Ahmad Golchin’s Fars Films, DISCO features a strong ensemble cast. Alongside Antony Varghese, the film stars Dev Mohan, Lukman Avaran, Arjun Ashokan, Chemban Vinod Jose, Sagar Surya, Vishnu Unnikrishnan, Femina George, Kalyani Anil, Meera Vasudevan, Gayathri Suresh, Senthil Krishna, Manikandan Achari, Appani Sarath, Sinoj Varghese and Vineeth Thattil.
The newly released first look gives audiences a glimpse of the film’s action-driven universe. The poster features the lead cast dressed in black and holding guns, sporting an ultra-stylish look that evokes the visual language of international action thrillers.
The gun motif incorporated into the title logo, along with the striking appearance of the characters, hints at an action entertainer packed with intense gunfights and high-energy sequences.
With a larger-than-life approach and an international action aesthetic, DISCO is being positioned as a stylish and adrenaline-fuelled entertainer. The film is expected to offer a distinct action experience while bringing together an impressive lineup of Malayalam cinema talent.
The technical crew includes Armo as the cinematographer, Manikandan Ayyappa as the music composer and Rohith V.S. Variyath as the editor. Gokul Das serves as the art director, while Kala Kingson choreographs the action sequences. Melvy J is the costume designer and Ronex Xavier is in charge of makeup. Ident Labs has handled the VFX.
Icon Cinemas is distributing the film.
With a promising ensemble cast, a striking visual style and action at its core, DISCO is gearing up for a worldwide theatrical release on November 6.
