
சாய்ராவின் ‘ஹலோ மிஸ்’ – முதல் பார்வையிலேயே கவனம் ஈர்க்கும் புதிய படைப்பு
சென்னை, ஆகஸ்ட் 19: காதல், இளமை, ரசனை என இன்றைய தலைமுறைக்குப் பிடித்த அம்சங்களை மையமாக வைத்து உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’. நமஹா மூவி மேக்கர்ஸ் சார்பில் என். குமார்லால் நேரு தயாரிக்கும் இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
‘ஹலோ மிஸ்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதன் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதலை வெறும் வழக்கமான பாணியில் சொல்லாமல், இளமைத் துடிப்பும் ரசனையான உணர்வுகளும் கலந்த பொழுதுபோக்கு அனுபவமாக படத்தை உருவாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி. ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், KPY சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சண்டைக் காட்சிகளை எஸ்.ஆர். ஹரி முருகன் வடிவமைத்துள்ளார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளனர்.
ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், பிரின்ஸ் ஜார்ஜ், சத்ய பிரகாஷ், கபில் கபிலன், அந்தோணி தாசன், ஸ்வேதா அசோக் ஆகியோர் பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவை ஆர்.பி. குருதேவ் மேற்கொள்ள, பிரின்ஸ் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.
வி. மாணிக்கவாசகம் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ்.எம். சேகர் நிர்வாக தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இளமைக்கே உரிய உற்சாகம், காதலின் மென்மையான உணர்வுகள் மற்றும் ரசிக்க வைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஹலோ மிஸ்’, ரசிகர்களுக்கு புதுமையான திரை அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டு தகவல்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Sairaa’s ‘Hello Miss’ Promises a Fresh Blend of Love and Youthful Vibes
Chennai: A new Tamil film titled ‘Hello Miss’ is gearing up to offer audiences a refreshing mix of love, youthful emotions and feel-good entertainment. Produced by N. Kumarlal Nehru under the banner of Namaha Movie Makers, the film is directed by Sairaa, who also plays the lead role. Bismi makes her debut as the female lead with this film.
The first-look poster of ‘Hello Miss’ has now been unveiled and has already caught the attention of moviegoers. The film is said to explore youthful relationships and emotions while presenting them in an entertaining and engaging manner.
The movie features an ensemble cast including K.S. Ravikumar, Kalyani Natrajan, Gajaraja, Janaki Suresh, G. Gnana Sambandhan, Senthil Kumari, Bhuvaneswari, Bala Hassan, Dinesh, KPY Sarath, Swaminathan, Sathyan, Birla Bose, Citizen Mani and Maran in prominent roles.
S.R. Hari Murugan has choreographed the stunt sequences, while Brinda and Dinesh have handled the choreography.

Yugabharathi, Vivek, Thamarai and Viveka have penned the lyrics for the songs. The tracks have been rendered by popular singers including Haricharan, Swetha Mohan, Prince George, Sathya Prakash, Kapil Kapilan, Anthony Dasan and Swetha Ashok.
R.B. Gurudev is the cinematographer, while Prince George has composed the music. V. Manikkavasagam serves as the Production Supervisor, with S.M. Sekar as the Executive Producer.
The film was shot across Chennai, Trichy and Puducherry. With its focus on love, youthful energy and feel-good emotions, ‘Hello Miss’ is being positioned as an entertaining and refreshing cinematic experience.
With the first-look poster now out, the film has begun generating curiosity among audiences, with more updates expected from the team soon.
