
“ராஜா சார் எனக்காக இசையமைத்த அந்த நிமிடம் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்தேன்” – ‘மஞ்சணத்தி’ விழாவில் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்!
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு கோலாகல தொடக்கம்!
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சங்களுடனும், மண்ணின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக திரையில் பதிவு செய்வதிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படப்பிடிப்பு தொடக்க விழா நடைபெற்றதன் மூலம், படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.
தனது திரைப்படங்களில் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, மண்ணோடு இணைந்த உணர்வுகள், மனித உறவுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை மிக இயல்பான திரைமொழியில் பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் தனது வாழ்வியல் அனுபவங்களுடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு கதையை கையாளவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ‘வாழை’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகுல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராகவி என்ற புதுமுக நடிகையும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
இளையராஜா ஏற்றிய குத்துவிளக்கு… கிளாப் அடித்து தொடங்கிய முதல் காட்சி!
படப்பிடிப்பு தொடக்க விழாவில் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, படத்தின் இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, படத்தின் முதல் காட்சிக்கான கிளாப் போர்டையும் அடித்து, ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், தனது வாழ்நாளில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இந்த நிகழ்வை கருதுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“என்னுடைய திரைப்படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகவும், கோலாகலமாகவும் பூஜையுடன் தொடங்கியதில்லை. ஆனால், இந்தப் படத்தை அப்படித்தான் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு மிக முக்கியமான காரணம், இந்தப் படத்தில் இளையராஜா சார் இருப்பதுதான்.
ஒரு காலத்தில் இளையராஜா சாரை நேரில் பார்க்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசையாக இருந்தது. இன்று அவர் என்னுடைய திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது என் வாழ்நாளில் நான் அடைந்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதுகிறேன்.
என் மனைவி திவ்யா செல்வராஜுக்கும் இளையராஜா சாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இன்று அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் இளையராஜா சார் பணியாற்றுவது எங்களுடைய குடும்பத்திற்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.
என்னுடைய உழைப்பு, வாசிப்பு, அரசியல் புரிதல் என பல விஷயங்களில் நான் எப்போதும் ஒரு தன்னம்பிக்கையுடனும் கர்வத்துடனும் இருந்திருக்கிறேன். ஆனால், எனக்காக அதிகாலையிலேயே எழுந்து இசையமைத்து, ‘உனக்காகத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன், வா’ என்று இளையராஜா சார் என்னை அழைத்த அந்த நிமிடம், நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.
பல தலைமுறைகளை கடந்து இன்றும் அதே உழைப்புடன் செயல்பட்டு வரும் அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தக்கூடிய எங்கள் ராஜாவின் கர்வமும், திமிரும் கூட அழகானது, உயர்வானது, மகத்துவமானது.
இந்தப் படம் நிச்சயம் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாக ஒரு திரைக்கதை எழுதும்போது நடிகர்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள் என பல விஷயங்களை யோசிப்பேன். ஆனால், இந்தப் படத்தை எழுதும்போது மட்டும் ஒவ்வொரு இடத்திலும் ‘இந்தக் காட்சியில் ராஜா சார் எப்படி இசையமைப்பார்?’ என்பதைத்தான் அதிகமாக யோசித்தேன்.
இந்தப் படம் திரைக்கு வரும் நாள் என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக இருக்கும். இந்தப் படத்தில் கதிர் இருப்பதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. நான் திரைத்துறையில் இயக்குநராக இருப்பதற்கே அவரும் ஒரு வகையில் முக்கிய காரணம். இந்தக் கதையை முழுமையாக கூறுவதற்கு முன்பே அவர் நடிக்க சம்மதித்தார்.
பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன. படம் வெளியாகும்போது அவர்களின் பங்களிப்பு அனைவருக்கும் புரியும்.
‘மஞ்சணத்தி’ திரைப்படம் என் வாழ்க்கைக் கதையையும் ஒரு வகையில் தழுவியதாக இருக்கும். இந்தப் படம் படக்குழுவினர் மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமையும்” என்றார்.

“எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இதுவரை யாருக்கும் வந்ததில்லை” – இளையராஜாவின் நெகிழ்ச்சியான உரை
விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, தனது சிறுவயது வாழ்க்கை, இசைப் பயணம் மற்றும் இசையுடனான தனது ஆன்மீகமான தொடர்பு குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர் கூறுகையில்,
“நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் இப்படியே கொஞ்சம் தூரம் சென்றால் என்னுடைய ஊருக்கு சென்றுவிடலாம். நானும் இந்த மண்ணில்தான் பிறந்தவன். காடுமேடுகளிலும், முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான்.
அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறினேன். இசையை சொல்லிக்கொடுக்க எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.
உலகின் மிகப்பெரிய இசை மேதைகள் பலரும் சிறுவயதிலேயே பியானோவை பார்த்து, கற்று வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது.
அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று கூறவில்லை. ஆனால், இசை எனக்குள் தானாகவே வந்தது. எனக்குள் ஓடும் அந்த இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை கர்வமாக சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சில விஷயங்களை கர்வத்தோடுதான் சொல்ல வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தனது இசை ஏற்படுத்திய தாக்கம் குறித்து உணர்வுப்பூர்வமான ஒரு சம்பவத்தையும் இளையராஜா பகிர்ந்து கொண்டார்.
ஜெர்மனியில் வசித்து வந்த தமிழ் தம்பதியரின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் தனது இசையை அந்தப் பெண்ணுக்கு கேட்கச் செய்ததாகவும், இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தையின் உயிர் அசைவுகள் மீண்டும் தென்பட்டதாகவும் அவர் கூறினார்.
“அதற்காக நான் எந்தப் பெருமையையும் எடுத்துக்கொள்ளவில்லை. இசையமைப்பது என்னுடைய வேலை. அந்த சக்தியை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். நான் என் வேலையை செய்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட பணியை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன். அவர் இசையை உண்மையாகவே கொண்டாடக்கூடிய ஒருவர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதில் பணியாற்றும் அனைவருக்கும் நல்ல பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு
‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இணைந்துள்ளனர்.
படத்திற்கு எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை செல்வா RK மேற்கொள்கிறார். கலை இயக்குநராக ராமு தங்கராஜ் பணியாற்றுகிறார்.
சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைக்கிறார். நடன இயக்குநராக சாண்டி பணியாற்றுகிறார். ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார்.
ஒலி வடிவமைப்பு பணிகளை சுரேன்.G மற்றும் அழகியகூத்தன்.S மேற்கொள்கின்றனர். ரஞ்சித் அம்பாடி மேக்கப் பணிகளை கவனிக்கிறார். VFX பணிகளுக்கு ஹரிஹரசுதன் R பொறுப்பேற்றுள்ளார்.
படத்தின் பப்ளிசிட்டி டிசைனை கபிலன் மேற்கொள்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகம் பணியாற்றுகிறார்.
மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பு
‘மஞ்சணத்தி’ திரைப்படத்தை திவ்யா மாரி செல்வராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் சுஷாந்த் பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஹர்ஷ் லால்வானி இணைத் தயாரிப்பாளராக உள்ளார்.
நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்ச்சூன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
மாரி செல்வராஜின் தனித்துவமான திரைமொழி, அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய கதைக்களம் மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசை ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் ஒன்றிணைந்துள்ளதால், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், நடிகர்களின் கதாபாத்திரங்கள், படத்தின் கதைக்களம் மற்றும் வெளியீடு குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Ilaiyaraaja Begins Mari Selvaraj’s ‘Manjanathi’ as Filming Commences!
Mari Selvaraj Gets Emotional as Ilaiyaraaja Joins His Dream Project: “The Moment He Composed Music for Me, I Realised We Are Nothing”
The shooting of director Mari Selvaraj’s much-anticipated new film, Manjanathi, has officially commenced. The project has generated significant excitement among திரைப்பட ரசிகர்கள் as it marks the coming together of acclaimed filmmaker Mari Selvaraj and legendary composer Ilaiyaraaja.
Ever since the announcement of their collaboration, Manjanathi has been one of the most eagerly anticipated upcoming Tamil films. The film’s shooting was formally launched with a grand ceremony attended by the cast and technical crew.
Known for bringing stories rooted in the soil, social realities and human emotions to the screen, Mari Selvaraj is expected to explore another deeply personal and emotionally rooted narrative through Manjanathi. The filmmaker has revealed that the story also draws inspiration from his own life experiences.
Actor Kathir plays a key role in the film, alongside Priyanka Mohan, Kayadu Lohar, Poornima Ravi, Vidu, Kaaka Muttai fame Vignesh, Vaazhai fame Rahul and newcomer Raghavi, who makes her acting debut with this project.

Ilaiyaraaja Lights the Lamp and Gives the First Clap
The launch ceremony of Manjanathi was attended by the entire cast and technical team. Adding a special significance to the occasion, legendary composer Ilaiyaraaja lit the traditional ceremonial lamp and officially inaugurated the shooting.
He also gave the first clap for the opening shot, marking the formal beginning of the film’s production.
Speaking at the event, director Mari Selvaraj became emotional while sharing what it meant for him to have Ilaiyaraaja compose music for one of his films.
Mari Selvaraj said:
“I have never started any of my previous films with such grandeur and a traditional pooja ceremony. But I always wanted this film to begin in a special manner. The biggest reason for that is the presence of Ilaiyaraaja sir in this project.
There was a time when simply meeting Ilaiyaraaja sir in person was one of my greatest wishes. Today, the fact that he is composing music for my film is one of the biggest achievements of my life.
My wife Divya Selvaraj had also wished for a long time to meet Ilaiyaraaja sir. The fact that he is now working on a film produced by her is something we will never forget.
I have always carried confidence and pride in my hard work, reading and political understanding. But when Ilaiyaraaja sir woke up early in the morning to compose music for me and called me saying, ‘I am writing this for you, come,’ I realised at that moment that we are nothing.
His dedication and hard work, continuing across generations, is truly extraordinary. The pride and confidence of our Raja, who has made everything possible through his music, are beautiful, elevated and महान.”
Mari Selvaraj further said that he has immense confidence in Manjanathi and believes the film will emerge as a successful project.
“Usually, while writing a screenplay, I think about the actors, characters and scenes. But while writing this film, I constantly thought about how Raja sir would compose music for a particular moment.
The day this film reaches theatres will be one of the most important days of my life.
There is an important reason why Kathir is part of this film. He is also one of the reasons why I am here today as a filmmaker. He agreed to act in the film even before I had fully narrated the story to him.
Priyanka Mohan, Kayadu Lohar and all the other actors have very important roles in this film. The audience will understand their significance when they watch the film.
Manjanathi will also have elements inspired by my own life story. I believe it will be an unforgettable experience for everyone involved and for the audience as well,” he said.
“The Musical Life Within Me Has Never Existed in Anyone Else” – Ilaiyaraaja
Legendary composer Ilaiyaraaja also delivered an emotional and inspiring speech at the launch event, reflecting on his childhood, his journey into music and his deep connection with his art.
He said:
“You all say that you were born and raised in the forests and rugged lands. If I travel a little further from here, I will reach my own home. I too was born in this soil. I grew up among forests, open lands and thorny bushes.
Somehow, I learned music and moved forward in life. There was no one around me to teach me music. With an intense thirst to learn, I taught myself.
The greatest musical geniuses in the world saw and learned the piano from a very young age. But I was already 27 years old when I first saw a piano.
I am not saying that I am greater than everyone else because of that. But music came naturally from within me. The life force of music that flows within me has never existed in anyone else and will never exist again. You may think I am saying this with pride. Yes, some things must be said with pride.”
Ilaiyaraaja also shared an emotional incident involving a Tamil couple living in Germany. He recalled that a pregnant woman had reportedly stopped feeling movements from the baby in her womb, following which doctors advised immediate surgery.
According to Ilaiyaraaja, his music was played for the woman while she remained under medical observation. After two days, when doctors examined her again before the planned surgery, they reportedly found signs of life and movement from the baby.
Speaking about the incident, Ilaiyaraaja said:
“I do not take any pride or credit for that. Composing music is my work. God has given me that ability and I simply do my work. This is what Saraswati has blessed me with.
Today, I am creating such music in collaboration with Mari Selvaraj. He is someone who truly celebrates my music.
I pray that this film becomes a great success and that everyone associated with it earns a good name and recognition.”
Experienced Technical Team Joins ‘Manjanathi’
Manjanathi brings together an accomplished technical team.
Ezhil Arasu K handles the cinematography, while Selva RK is in charge of editing. Ramu Thangaraj serves as the art director.
Dilip Subbarayan will choreograph the action sequences, while Sandy takes care of the dance choreography. Aegan Ekambaram is handling costume design.
The sound design is being handled by Suren G and Azhagiyakootthan S, while Ranjith Ambady is in charge of makeup. Hariharasudhan R will oversee the VFX work.
Kapilan is handling publicity designs, while Venkat Arumugam serves as the executive producer.
Produced by Divya Mari Selvaraj, Mari Selvaraj and Sushant Prasad
The film is jointly produced by Divya Mari Selvaraj, Mari Selvaraj and Sushant Prasad, with Harsh Lalwani serving as the co-producer.
Manjanathi is being jointly produced by Navvi Studios, Fortune Entertainment and Skanda Pictures.
With Mari Selvaraj’s distinctive storytelling, a narrative said to be closely connected to his own life and the musical brilliance of Ilaiyaraaja coming together, Manjanathi has already emerged as one of the most interesting upcoming Tamil film projects.
As shooting has now officially begun, further updates regarding the film’s storyline, characters and release plans are expected to be announced in the coming months.
