Wednesday, September 9
Shadow

“கடினமான தருணத்திலிருந்து வாழ்க்கையை மாற்றும் முடிவு!” – ‘சிக்மா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்

“கடினமான தருணத்திலிருந்து வாழ்க்கையை மாற்றும் முடிவு!” – ‘சிக்மா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு உற்சாகமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ் பிரிவின் தலைவர் தமிழ்குமரன், ‘சிக்மா’ திரைப்படம் ஜேசன் சஞ்சய்க்கு மட்டுமல்லாமல் லைகா நிறுவனத்திற்கும் முக்கியமான படைப்பு எனக் குறிப்பிட்டார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படமான ‘கத்தி’யில் தொடங்கிய பயணத்தில், தற்போது ஜேசன் சஞ்சய் போன்ற புதிய இயக்குநருக்கு அறிமுக வாய்ப்பளிப்பதில் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ‘கோலமாவு கோகிலா’ மூலம் இயக்குநர் நெல்சனையும், ‘டான்’ மூலம் சிபி சக்கரவர்த்தியையும் அறிமுகப்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், அந்த வரிசையில் ஜேசன் சஞ்சய்யும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகை ஃபரியா அப்துல்லா பேசுகையில், ‘சிக்மா’ தனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என்றும், இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் சினிமா மீதான ஈடுபாடும் திரைப்பட உருவாக்கத்தின் மீதான ஆர்வமும் படப்பிடிப்பு தளத்தில் தெளிவாக தெரிந்ததாகவும் கூறினார். குறிப்பாக, சந்தீப் கிஷனை ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இந்த திரைப்படம் காட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பேசுகையில், புதிய இயக்குநராக ஜேசன் சஞ்சய்க்கு லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கியிருக்கும் வாய்ப்பு மிகப்பெரிய பொறுப்பு என்றும், அந்த வாய்ப்பை அவர் திறம்பட பயன்படுத்தியுள்ளதாகவும் கூறினார். தனக்குத் தேவையானதை தெளிவாகவும் பொறுமையாகவும் கலைஞர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் திறமை ஜேசன் சஞ்சய்க்கு இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

நடிகர் சந்தீப் கிஷன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது, ‘சிக்மா’ போன்ற ஒரு திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் அரிதான அனுபவம் எனக் கூறினார்.

“என்னை நம்பி தனது முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு நன்றி. தனது முதல் படத்தின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். ‘சிக்மா’ ஒரு கலகலப்பான ஜெனரேஷன் Z திரைப்படமாக இருக்கும். நாம் உண்மையாக நேசிக்கும் விஷயத்தை பயமின்றி செய்யும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். அந்த நம்பிக்கை இந்த படத்திற்கும் இருக்கிறது,” என்றார்.

மேலும், இப்படத்தின் வெற்றிக்கு இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய இருவருமே முக்கிய காரணங்களாக இருப்பார்கள் என்றும் சந்தீப் கிஷன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக, இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படம் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். ‘சிக்மா’ படத்தின் விளம்பரப் பயணத்தை சேலத்தில் தொடங்குவதில் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்த அவர், படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் 10 நாட்கள் சேலத்தில் தங்கியிருந்ததால் அந்த நகரத்துடன் இனிமையான நினைவுகள் இருப்பதாக கூறினார்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன், தமிழ்குமரன், நடிகர்கள் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தினரின் ஆதரவையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

‘சிக்மா’ என்ற தலைப்பின் பின்னணியை விளக்கிய அவர், “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு ‘சிக்மா தருணம்’ இருக்கும். கடினமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முக்கியமான முடிவு, நம் வாழ்க்கையின் பாதையையே மாற்றக்கூடியதாக இருக்கும். அந்த உணர்வையும் பயணத்தையும் மையமாகக் கொண்டதே ‘சிக்மா’ திரைப்படம்,” என்றார்.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதாலும், சந்தீப் கிஷன் புதிய கதாபாத்திரத்தில் தோன்றுவதாலும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளதால் ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சிக்மா’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என படக்குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

“A Decision Taken During Difficult Times Can Change Your Life” – Jason Sanjay on His Directorial Debut ‘Sigma’

Jason Sanjay is all set to make his directorial debut in Tamil cinema with Sigma, produced by Subaskaran under the prestigious Lyca Productions banner. The film stars Sundeep Kishan in the lead, alongside Faria Abdullah and several others in important roles.

Scheduled for a theatrical release on October 2, Sigma recently held its pre-release event, with the cast and crew sharing their experiences and expressing confidence about the film.

Speaking at the event, Lyca Productions Tamil Head Tamil Kumaran described Sigma as a significant project not only for debutant director Jason Sanjay but also for the production house.

He recalled Lyca Productions’ journey in supporting emerging filmmakers and expressed pride in introducing Jason Sanjay as a director through their banner. Tamil Kumaran also praised Jason’s filmmaking abilities and said the film had shaped up well.

Referring to the production house’s earlier association with filmmakers such as Nelson through Kolamaavu Kokila and Cibi Chakravarthy through Don, he expressed confidence that Jason Sanjay too would carve out a successful place for himself in the Tamil film industry.

Tamil Kumaran further stated that the team is hopeful of Sigma becoming a major commercial success and believes the film has the potential to cross the Rs.100 crore mark at the box office.

Actress Faria Abdullah said that Sigma is a very special film for her and praised Jason Sanjay’s passion for cinema and filmmaking. She also expressed confidence that audiences would get to see Sundeep Kishan in a character unlike anything he has portrayed before.

Lyricist Super Subu appreciated Lyca Productions for giving Jason Sanjay such an important opportunity for his directorial debut. He praised the young filmmaker’s clarity and patience in working with the team and expressed his confidence that the film would emerge as a major success.

Actor Sundeep Kishan described Sigma as a rare and special project in his career.

Thanking Jason Sanjay for trusting him with the lead role in his debut film, Sundeep said the director had worked extremely hard to establish his own identity through the project.

Sigma is a fun and energetic Gen Z film. When we pursue something we truly love without fear, success will eventually follow. I believe the same will happen with Sigma,” he said.

Sundeep Kishan further credited Jason Sanjay and Lyca Productions as the two major pillars behind the project and appreciated the entire team for their sincere efforts.

The highlight of the event was director Jason Sanjay sharing his thoughts about his first film. He expressed happiness over beginning the promotional journey of Sigma from Salem, where the team had spent nearly ten days shooting for the film.

Thanking producer Subaskaran, Tamil Kumaran, actors Sundeep Kishan and Faria Abdullah, and the entire technical team, Jason Sanjay also expressed his gratitude to his family for their constant support.

Explaining the idea behind the title and concept of Sigma, the debutant filmmaker said:

“Every person will have a ‘Sigma moment’ in life. There comes a time when we are going through difficult situations, and a decision we take to overcome those challenges can completely change the course of our lives. That is what Sigma is about.”

With Jason Sanjay making his much-awaited directorial debut, Sundeep Kishan appearing in a fresh avatar, and Lyca Productions backing the project, Sigma has already generated considerable expectations among cinema ரசிகர்கள்.

The makers are confident that the film will offer audiences an entertaining and refreshing theatrical experience when it hits screens worldwide on October 2.