Friday, November 13
Shadow

‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு படம் அல்ல… என் வாழ்க்கையின் ஒரு பகுதி – சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் உருக்கமான பேச்சு!

‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு படம் அல்ல… என் வாழ்க்கையின் ஒரு பகுதி – சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் உருக்கமான பேச்சு!

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் கலந்து கொண்டு படத்தின் உருவாக்க அனுபவம் குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.

அவர் பேசுகையில், “இந்தப் படத்தில் நான் பணியாற்றத் தொடங்கிய பிறகு, இது ஒரு திரைப்படம் என்ற எண்ணத்தைத் தாண்டி, என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இயக்குநர் கார்த்திக் முதலில் என்னிடம் கதையைப் பற்றி கூறியபோது, எனது வேலைப்பளு காரணமாக உடனடியாக படிக்க முடியவில்லை. பின்னர் கதையை முழுமையாகப் படித்தபோது, அது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக ஒரு படத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும்போது, கதாபாத்திரத்தின் உடல் அசைவுகள், காட்சியின் தன்மை, ஆக்‌ஷன் எப்படியிருக்க வேண்டும் என்பதில்தான் எனது கவனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் சில காட்சிகளை உருவாக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டே காட்சிகளை வடிவமைத்திருக்கிறேன். அது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம்.

இந்தப் படத்திற்காக என்னுடைய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையிலும் பல விஷயங்களை மாற்றிக்கொண்டேன். 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில், எந்த ஒரு படத்திற்கும் இந்த அளவுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்ததில்லை. இந்தப் படத்தை என்னுடைய சொந்த நிறுவனத்திற்காகச் செய்வது போலவும், என்னுடைய சகோதரருக்காகச் செய்வது போலவும் நினைத்து பணியாற்றினேன்.

இந்தப் படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பமாகவே மாறிவிட்டோம். அஷோக், அபி உள்ளிட்ட அனைவருடனும் ஏற்பட்ட உறவு மிகவும் நெருக்கமானது. படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் ஒரு குடும்பமாகவே பணியாற்றினோம்.

படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அதிக கவனம் செலுத்தினோம். குறிப்பாக கதையின் உணர்வை எந்தவித செயற்கைத்தன்மையும் இல்லாமல் திரையில் கொண்டுவர முயற்சி செய்தோம்.

இந்தப் படத்திற்காக சுமார் 45 முதல் 50 நாட்கள் முழுமையாக ஒதுக்கினேன். அந்த காலகட்டத்தில் வேறு படங்களில் பணியாற்றாமல், ‘அன்பில் அவன்’ படத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், இந்தப் படத்திற்காக அவற்றைத் தள்ளி வைத்து முழுமையாக அர்ப்பணித்தது எனக்கு மிகவும் முக்கியமான தனிப்பட்ட முடிவாக இருந்தது.

இயக்குநர் கார்த்திக் அனுப்பிய சில பாடல்கள் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் இசையும், காட்சிகளின் இயல்பான தன்மையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கார்த்திக் இன்னும் உயரங்களைத் தொடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதிர்காலத்திலும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்.

அஷோக் மற்றும் அபிக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். இந்தப் படத்தின் மூலம் உருவான உறவு தொடர்ந்து ஒரு குடும்ப உறவாகவே இருக்கும்.

இந்தப் படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள் என்று தெரியும். ஆனால் இது முழுக்க முழுக்க ஆக்‌ஷனை மையமாகக் கொண்ட படம் என்று எதிர்பார்க்க வேண்டாம். நாம் நிஜ வாழ்க்கையில் எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்கிறோம், எப்படி உயிர்வாழ்கிறோம் என்பதுதான் இந்தப் படத்தின் முக்கியமான அம்சம்.

அதே நேரத்தில் இது காதலைப் பற்றிய கதையும் கூட. ஒருவரின் வாழ்க்கையில் காதலுடன் பொறுப்பும் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும் திரைப்படமாக இது இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்களுக்கு அதன் உண்மையான உணர்வு புரியும்,” என்று பீட்டர் ஹெய்ன் தெரிவித்தார்.

Peter Hein Opens Up About His Emotional Journey With Anbil Avan: “This Film Became a Part of My Life”

At an event for the upcoming film Anbil Avan, renowned stunt choreographer Peter Hein spoke at length about his deeply personal experience of working on the film and his emotional connection with the team.

Speaking at the event, Peter Hein said that Anbil Avan gradually became much more than just another film for him. He revealed that the project had a significant impact on both his personal and professional life.

Peter Hein said, “When director Karthik first approached me with the story, I was extremely busy with my schedule and it took me some time to read the script. But once I went through it, the story deeply touched me. From that point onwards, everything changed for me — from my personal life to my professional approach and even my attitude towards the film.”

He further revealed that his experience on Anbil Avan was unlike anything he had encountered in his more than three decades in the industry.

“In my 34-plus years of experience, I have never made a commitment or taken up a film in the way I did with this one. I treated this film as if it were my own company’s project. More importantly, I did it for my brother. I took it very seriously,” he said.

Peter Hein also spoke emotionally about the impact of the film’s story on him. Unlike his usual approach to designing action sequences, he found himself becoming emotionally involved while working on the film.

“Normally, when I compose action sequences, I think about the movements, how the hands and legs should move and how the entire sequence should be executed. But with this film, there were moments when I would sit and cry while composing the scenes. That was a completely new experience for me,” he shared.

He also praised the bond that developed among the cast and crew, describing the entire team as a family.

“Everyone became like family. Ashok became my brother and Abhi became part of that family. During the shoot, we worked together like one family. That relationship made the entire experience even more special,” Peter Hein said.

According to him, the team took a very realistic approach while bringing the characters and situations to life.

“From Abhi to the DOP, director Karthik and everyone involved, we took the film very seriously. We wanted everything to feel raw and real. The performances and situations were created in a way that audiences could connect with them naturally,” he added.

Peter Hein also revealed that he dedicated nearly 45 to 50 days exclusively to Anbil Avan, despite having several other projects in hand.

“I had around seven other films lined up. I told my secretary that I was going to do this film and asked them to leave me alone for those 45 to 50 days. I couldn’t take up other commitments in between the shoot because I wanted to completely focus on this film. Eventually, I put everything aside and came only for this project. That was also a very personal decision for me,” he said.

Praising director Karthik, Peter Hein said he was impressed by the film’s music and realistic presentation and expressed his desire to collaborate with the filmmaker again.

“You will grow a lot. You will grow bigger, and I am looking forward to working with you in my future films. Ashok and Abhi, I will always be behind you. As long as I am there, we will remain a family,” he said.

Speaking about what audiences can expect from Anbil Avan, Peter Hein clarified that the film should not be viewed merely as an action entertainer.

“People may have a lot of expectations when they hear about this film, but don’t expect it to be only about action. It is about how we survive in real life and how we deal with situations. At its core, it is also about love and about a person who takes responsibility,” he said.

Concluding his speech, Peter Hein expressed confidence that audiences would understand the true emotion of the film only after watching it on the big screen.

“I don’t want to reveal too much because there will be a time for us to speak about the film after people watch it. What I can say is that this has been a very special and deeply personal experience for me,” he concluded.