Wednesday, October 28
Shadow

ஒரு தயிர் வடை… ஆயிரம் நினைவுகள்! கண்கலங்கிய சமந்தா ரூத் பிரபு!

ஒரு தயிர் வடை… ஆயிரம் நினைவுகள்! கண்கலங்கிய சமந்தா ரூத் பிரபு!

சில உணவுகள் வெறும் பசியைப் போக்குவதோடு நின்றுவிடுவதில்லை. அவை நம்முடைய பால்ய காலத்தையும், மறக்க முடியாத தருணங்களையும், மனதுக்கு நெருக்கமான மனிதர்களையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும். அப்படியொரு உணர்வுபூர்வமான தருணத்தைத்தான் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு பகிர்ந்துகொண்டுள்ளார்.

பள்ளிப் பருவத்தில் தனக்குப் பிடித்தமான உணவாக இருந்த பல்லாவரம் துர்கா ஹோட்டலின் தயிர் வடை குறித்துப் பேசிய சமந்தா, அந்தச் சுவையுடன் இணைந்திருந்த பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்தபோது கண்கலங்கினார். நிகழ்ச்சியில் அரங்கேறிய இந்த நெகிழ்ச்சியான தருணம் பார்வையாளர்களையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

சமந்தாவிடம் தனது பள்ளிப் பருவத்திற்குத் திரும்பிச் செல்வதாகக் கற்பனை செய்யுமாறும், அங்கிருந்து நேராகப் பல்லாவரத்தில் உள்ள துர்கா ஹோட்டலுக்குச் செல்வதாக நினைத்துப் பார்க்குமாறும் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது பள்ளி நாட்களையும் அப்போது தனக்குப் பிடித்திருந்த தயிர் வடையின் சுவையையும் மனதில் அசைபோட்ட சமந்தா, அந்த நினைவுகளால் நெகிழ்ந்து கண்கலங்குகிறார்.

சமந்தாவை நெகிழ வைத்தது தயிர் வடை மட்டுமல்ல; அந்தச் சுவையோடு சேர்ந்திருந்த பால்ய கால நினைவுகளும்தான்!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பலரும் கடந்து வந்த பள்ளிப் பருவத்தை நினைத்துப் பார்க்கும்போது மனதில் ஒருவிதமான மகிழ்ச்சியும் ஏக்கமும் ஏற்படுவது இயல்பு. பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் சாப்பிட்ட தின்பண்டங்கள், குடும்பத்தினருடன் சென்ற உணவகங்கள், பிடித்தமான உணவுக்காகக் காத்திருந்த தருணங்கள் என ஒவ்வொருவருக்கும் மனதுக்கு நெருக்கமான நினைவுகள் இருக்கும். பல ஆண்டுகள் கடந்தாலும், அந்த உணவின் சுவை மீண்டும் கிடைக்கும்போது பழைய நினைவுகள் அப்படியே மனதில் உயிர்பெறுகின்றன.

சமந்தாவின் இந்த அனுபவமும் அதையே உணர்த்துகிறது. ஒரு சாதாரண உணவாகத் தோன்றும் தயிர் வடை, அவரைப் பொறுத்தவரை பள்ளிப் பருவத்தின் இனிமையான நாட்களை நினைவூட்டும் ஒன்றாக மாறியிருக்கிறது. உணவுக்கும் உணர்வுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கம்தான் இத்தருணத்தைச் சிறப்பாக்குகிறது.

எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி, சமையல் போட்டிகளைத் தாண்டி, பிரபலங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளுடன் இணைந்த நினைவுகளையும் வெளிப்படுத்தும் தளமாகவும் அமைந்துள்ளது. தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு சமையல் சவால்களை எதிர்கொள்வதுடன் தங்களது சமையல் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு பிரபல நடுவராகப் பங்கேற்கிறார். சமையல் கலைஞர்கள் வெங்கடேஷ் பட், சாஷி செல்லையா, ஸ்ரேயா அட்கா ஆகியோரும் நடுவர்களாக இடம்பெறுகின்றனர். நிகழ்ச்சியை ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்குகிறார்.

கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்க எப்போதும் பெரிய சம்பவங்கள் தேவையில்லை. சில நேரங்களில் நமக்குப் பிடித்தமான ஓர் உணவின் சுவையே போதும். சமந்தாவின் தயிர் வடை நினைவுகள் அதற்கு ஓர் அழகான உதாரணம்!

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியை சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சியிலும், சோனி லிவ் தளத்திலும் காணலாம்.

 

One Bite, a Thousand Memories! Samantha Ruth Prabhu Gets Emotional Over Her Favourite Curd Vada

Some foods do more than satisfy our hunger. They take us back to cherished childhood memories, familiar places and moments that remain close to our hearts. Actress Samantha Ruth Prabhu experienced one such emotional moment on Celebrity MasterChef Tamil, leaving viewers touched by her heartfelt reaction.

During the show, Samantha recalled her childhood favourite, the famous curd vada from Durga Hotel in Pallavaram. As she revisited the memories associated with the dish, the actress became emotional and teared up, creating a heartwarming moment on the show.

Samantha was asked to close her eyes and imagine herself travelling back to her school days, heading straight to Durga Hotel in Pallavaram. As she pictured those simpler, happier days and remembered the food she loved, the memories overwhelmed her with emotion.

For Samantha, it was more than just a plate of curd vada. It was a taste of childhood, filled with memories she holds close to her heart.

In the rush of everyday life, looking back at our school days often brings a mix of happiness and nostalgia. Whether it is enjoying snacks with friends after school, visiting a favourite restaurant with family or eagerly waiting for a much-loved dish, everyone has food memories that remain special over the years. Sometimes, a familiar taste is all it takes to bring those moments rushing back.

Samantha’s experience beautifully captures this connection between food and emotion. What might seem like an ordinary dish to others holds a much deeper meaning for her, taking her back to the innocence and warmth of her school days. It is this personal connection that makes the moment particularly touching.

Produced by Endemol Shine India, Celebrity MasterChef Tamil brings together popular personalities from the Tamil entertainment industry, challenging them to step outside their usual professional routines and explore the world of cooking. Through a series of culinary challenges, the celebrity contestants showcase their creativity, cooking skills and ability to perform under pressure, while celebrating the flavours and culinary traditions of Tamil culture.

Samantha Ruth Prabhu appears on the show as a celebrity judge, alongside chefs Venkatesh Bhat, Sashi Cheliah and Shreya Adka. RJ Vijay hosts the programme.

The emotional moment serves as a gentle reminder that revisiting the past does not always require a special occasion. Sometimes, all it takes is the familiar taste of a favourite dish to bring back memories that time can never erase.

Catch Celebrity MasterChef Tamil on Sony Entertainment Television and stream it on Sony LIV.