Wednesday, October 28
Shadow

பின்னணிப் பாடகியிலிருந்து இசையமைப்பாளர் வரை… புதிய பயணத்தைத் தொடங்கும் ஜனனி பரத்வாஜ்!

பின்னணிப் பாடகியிலிருந்து இசையமைப்பாளர் வரை… புதிய பயணத்தைத் தொடங்கும் ஜனனி பரத்வாஜ்!

Divo Music நிறுவனத்துடன் கைகோத்து சுயாதீன இசை உலகில் அறிமுகம்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது சுயாதீன இசையமைப்பாளராகப் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதன் மூலம் பாடகியாகத் தொடர்ந்த தனது இசைப் பயணத்தில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

தமிழில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி பரத்வாஜ், ஏற்கெனவே தனது குரலால் ரசிகர்களிடம் அறிமுகமானவர். அசல் படத்தில் இடம்பெற்ற ‘Tottadaing’, ஐயா படத்தின் ‘Athiri Pathiri’, பள்ளிக்கூடம் படத்தின் ‘Indha Nimidam’, பிறப்பு படத்தின் ‘Ulaga Azhagi Naan Dhan’ உள்ளிட்ட பாடல்கள் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கவை.

திரைப்படப் பாடல்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஜனனி, தற்போது தனது இசைச் சிந்தனைகளுக்கும் படைப்பாற்றலுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுயாதீன இசைத் துறையில் களமிறங்கியுள்ளார். கனடாவில் வசித்து வரும் அவர், Divo Music நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் சுயாதீன இசைப் படைப்பை உருவாக்கத் தயாராகி வருகிறார்.

இதுவரை பின்னணிப் பாடகியாகப் பயணித்த ஜனனி, இனி இசையமைப்பாளராகவும் தனது தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது அவரது இசைப் பயணத்தில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

ஜனனி பரத்வாஜின் இந்தப் புதிய இசை முயற்சி குறித்த கூடுதல் தகவல்களும், வரவிருக்கும் படைப்பு தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளன.

Janani Bharadwaj Embarks on a New Musical Journey as an Independent Composer

Playback Singer and Daughter of Music Director Bharadwaj Teams Up with Divo Music for Her Independent Music Debut

Janani Bharadwaj, playback singer and daughter of renowned Tamil music director Bharadwaj, is all set to embark on a new chapter in her musical career. After making her mark as a playback singer, Janani is now stepping into the world of independent music as a composer, marking a significant milestone in her artistic journey.

Having lent her voice to over 25 Tamil films, Janani has become familiar to audiences through songs such as ‘Tottadaing’ from Aasal, ‘Athiri Pathiri’ from Ayya, ‘Indha Nimidam’ from Pallikoodam, and ‘Ulaga Azhagi Naan Dhan’ from Pirappu.

Currently based in Canada, Janani is now looking to expand her musical horizons beyond playback singing and explore new creative possibilities through independent music. In collaboration with Divo Music, she is set to launch her first independent music venture, making her debut as an independent music composer.

This new initiative marks an important step in Janani’s musical journey, as she looks forward to establishing her own musical identity and showcasing her creative vision beyond the world of film music.

Further announcements regarding her upcoming independent music project are expected soon.