
ஜி.வி. பிரகாஷ்–கவுதம் மேனன் இணையும் ‘13’: டிசம்பரில் வெளியாகும் புதிய ஹாரர் த்ரில்லர்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், முன்னணி இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நடித்துள்ள புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ‘13’. மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
‘டார்லிங்’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஹாரர் திரில்லர் களத்தில் நடிக்கும் படமாக ‘13’ அமைந்துள்ளது. இதனால் இப்படம் அவரது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் கே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், அடர்ந்த காட்டை மையமாகக் கொண்ட மர்மமான சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘13’ என்ற எண்ணைச் சுற்றியுள்ள புதிர், அமானுஷ்ய சக்திகளின் தாக்கம் மற்றும் அதில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் போராட்டம் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து இயக்குநர் விவேக் கே கூறுகையில், “உண்மைச் சம்பவங்களின் சாயலில் உருவாகியுள்ள இந்தக் கதையில், இருளுக்குள் மறைந்திருக்கும் மர்மங்களும் மனிதர்களின் உயிர் போராட்டமும் முக்கிய இடம் பெறுகின்றன. ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் படத்தை வடிவமைத்துள்ளோம். வரும் டிசம்பர் மாதம் ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து மாறுபட்டு, ஹாரர், த்ரில்லர் மற்றும் புலனாய்வு அம்சங்களை இணைத்து ‘13’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனின் வித்தியாசமான தோற்றங்கள் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘13’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை விவேக் கே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன், பவ்யா திரிக்கா, ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா மற்றும் ஆத்யா பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைக்க, ஏஜே பின்னணி இசையமைக்கிறார். சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஜே.எஃப். காஸ்ட்ரோ கவனிக்கிறார். கலை இயக்கத்தை நாஞ்சில் பி.எஸ். ராபர்ட் மேற்கொண்டுள்ளார்.
தினேஷ் காசி மற்றும் ராம்குமார் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர். ஜேசன் ஜோஸ் சவுண்ட் டிசைனராக பணியாற்றியுள்ளார். மேக்கப்பை பி. மாரியப்பனும், ஆடை வடிவமைப்பை பி. கணேசனும் கவனித்துள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை ஜி. சங்கர் மேற்கொண்டுள்ளார். மக்கள் தொடர்புப் பணிகளை ரேகா (Raan T Art) கவனிக்க, போஸ்டர் வடிவமைப்பை சிவராம் சுரேஷ் மேற்கொண்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் ஹாரர் ரீ-என்ட்ரியும், கவுதம் வாசுதேவ் மேனனுடனான புதிய கூட்டணியும் ‘13’ திரைப்படத்திற்கு முக்கிய கவனத்தை பெற்றுத் தந்துள்ளன.

GV Prakash and Gautham Vasudev Menon Join Forces for Horror Thriller ‘13’
The first-look poster of ‘13’, an upcoming horror thriller produced by Madras Studios, has been officially unveiled. The film brings together actor and composer GV Prakash Kumar and acclaimed filmmaker-actor Gautham Vasudev Menon in prominent roles.
Marking GV Prakash Kumar’s return to the horror thriller genre after nearly 11 years since the success of Darling, 13 has already generated considerable interest among fans. Directed by Vivekh K, the film promises a blend of horror, suspense and investigation.
Set against the backdrop of a dense forest, 13 revolves around a mysterious series of events and the enigma surrounding the number “13”. The story also explores the struggle of people caught in the grip of supernatural forces, with the makers promising an intense and suspense-filled cinematic experience.
Speaking about the film, director Vivekh K said, “The story is inspired by the essence of real-life incidents and is set against the backdrop of a dense forest. The mystery surrounding the number ‘13’ and the struggle of people trapped in the grip of evil forces will create tension and suspense throughout the film. We are eagerly looking forward to bringing this experience to audiences in theatres this December.”
Unlike conventional horror films, 13 is said to combine supernatural elements with thriller and investigative aspects. The newly released first-look poster, featuring striking appearances by GV Prakash Kumar and Gautham Vasudev Menon, has further raised expectations for the film.
With the final stages of production currently underway, 13 is slated for a theatrical release in December.
Cast and Crew
Produced by Madras Studios and directed by Vivekh K, the film features GV Prakash Kumar, Gautham Vasudev Menon, Bhavya Trikha, Adithya Kathir, Aishwarya and Aadhya Prasad in key roles.
Siddhu Kumar is composing the music, while AJ is handling the background score. The cinematography is by C.M. Moovendar, with editing by J.F. Castro. Nanjil P.S. Robert serves as the art director.
The stunt choreography is handled by Dinesh Kasi and Ramkumar, while Jaison Jose is in charge of sound design. P. Mariyappan handles makeup, and P. Ganesan is the costume designer. G. Shankar serves as the production executive, with publicity handled by Rekha (Raan T Art). The film’s promotional designs are by Sivaram Suresh.
GV Prakash Kumar’s return to the horror genre and his fresh on-screen collaboration with Gautham Vasudev Menon make 13 one of the intriguing Tamil releases to look forward to this December.
