
37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளை கலக்க வருகிறது ‘கரகாட்டக்காரன்’!
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத வெற்றிப் படங்களில் ஒன்றாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’, புதிய தொழில்நுட்ப மெருகூட்டலுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
1989-ஆம் ஆண்டு வெளியாகி, அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் கொண்டாட்டப் படமாகவும் திகழ்ந்து வருகிறது. கிராமிய மணம், இசை, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் தனித்துவமான இடத்தைப் பெற்ற ‘கரகாட்டக்காரன்’, தற்போது புதிய வடிவில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளது.
ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில், இப்படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப் வடிவம் மற்றும் DTS ஒலித் தரத்துடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒரு காலத்தில் திரையரங்குகளில் வசூல் புரட்சியை ஏற்படுத்திய ‘கரகாட்டக்காரன்’, 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் தனது மாயாஜாலத்தை நிகழ்த்த தயாராகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Karakattakaran’ Returns to the Big Screen After 37 Years with a Grand Digital Makeover!
One of Tamil cinema’s most celebrated and timeless blockbuster films, ‘Karakattakaran’, starring Makkal Nayagan Ramarajan, is all set to make a grand return to theatres with a brand-new technological upgrade.
Originally released in 1989, Karakattakaran created a massive box-office sensation and went on to become a memorable favourite among audiences. Known for its strong rural flavour, memorable music, humour and emotional storytelling, the film continues to hold a special place in the hearts of fans across generations.
Now, after 37 years, the iconic film is being brought back to the big screen with a modern makeover. The restoration and enhancement work is currently progressing at a rapid pace, with the film being upgraded using advanced digital technology, Cinemascope format and DTS sound to offer audiences an enhanced theatrical experience.
The re-release of Karakattakaran is expected to create a wave of nostalgia among longtime fans while introducing the classic entertainer to a new generation of moviegoers.
Having once created a box-office revolution during its original release, ‘Karakattakaran’ is now gearing up to recreate its magic in theatres once again!
The official announcement regarding the film’s re-release date is expected to be made soon.
