
அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்!
“ஜான் டோ யார்?” – இந்த ஒரு கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’, வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் மர்மம் நிறைந்த உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
காவல் சீருடையில் அர்ஜுன் தாஸ் மையமாக இடம்பெற்றுள்ள நிலையில், அவரைச் சுற்றி பல்வேறு கதாபாத்திரங்களின் முகங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஜான் டோ என்பவர் யார்? அவர் ஒரு பாதிக்கப்பட்டவரா? கொலைகாரனா? அல்லது காணாமல் போன குழந்தையா? என்ற பல கேள்விகளைச் சுற்றியே படத்தின் கதை நகர்கிறது. உண்மையைத் தேடி பயணிக்கும் சந்துருவின் விசாரணையில், யாரும் எதிர்கொள்ள விரும்பாத ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் ‘ஜான் டோ’ படத்தின் மையக்கரு. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், அர்ஜுன் தாஸுடன் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ள நிலையில், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மர்மம், குற்றம், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ‘ஜான் டோ’, நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,
“ஜான் டோ யார்?” என்ற கேள்விக்கான பதிலை ரசிகர்களுக்கு அளிக்க தயாராக உள்ளது.
Arjun Das’ ‘John Doe’ to Hit Theatres on November 13: A Mystery Waiting to Be Unravelled!
“Who is John Doe?” This intriguing question lies at the heart of the upcoming psychological crime thriller John Doe, starring Arjun Das in the lead role. The film is all set to hit theatres on November 13.
The makers officially announced the release date with a striking new poster that offers a glimpse into the film’s dark and mysterious world. Designed with a bold red and black backdrop, the poster features Arjun Das in the centre, dressed as a police officer, surrounded by several characters, mysterious visuals and clues connected to an investigation.
The expressions of the characters and the collection of seemingly interconnected images hint at several hidden secrets and mysteries waiting to be uncovered. The poster has already sparked curiosity among audiences and raised expectations for the psychological crime thriller.
The story revolves around one central mystery: Who is John Doe? Is he a victim, a killer, or a missing child?
As Chandru embarks on a journey to uncover the truth, he finds himself confronting a mystery that no one seems prepared to face. The film promises an unpredictable screenplay packed with twists and turns that will keep audiences guessing until the very end.
Produced by Shobu Yarlagadda and Prasad Devineni under the banner of Arka Mediaworks, the production house behind grand cinematic ventures including Baahubali, John Doe is directed by Madhumita.
Arjun Das plays the protagonist, marking his first appearance as a police officer on screen. The film also features Sanjana Natarajan, Srushti, Zara Vineet Sandhu, Neerav and several others in important roles.
Director Madhumita and Nicholas Chevaillier have jointly written the story and screenplay for the film.
The technical team includes acclaimed cinematographer Preetha Jayaraman ISC, while Mujeeb Majeed has composed the music. Artist 404 has handled the additional music, Vijay Venkataramanan is in charge of editing, and Ashwini Kale serves as the production designer.
Known for choosing distinctive and challenging roles, Arjun Das stepping into the shoes of a police officer has added another layer of excitement to the project. With its intriguing premise, mysterious characters and an unpredictable investigation at its core, John Doe is shaping up to be a gripping theatrical experience.
Produced by Arka Mediaworks, directed by Madhumita and featuring Arjun Das in a never-before-seen role, John Doe will unravel its mysteries in theatres worldwide on November 13.
