Friday, November 6
Shadow

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

புற்றுநோய் சிகிச்சையின் போது முடி இழப்பால் மனரீதியாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சிறப்பு சமூக நல நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சாதனை முயற்சியை, திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், இந்த முயற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது குடும்பத்திலும் புற்றுநோய் பாதிப்பால் ஏற்படும் சிரமங்களை நேரில் பார்த்த அனுபவம் இருப்பதாக பகிர்ந்து கொண்டார்.

தனது பாட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, சிகிச்சையின் காரணமாக முடி உதிர்வதை நேரில் பார்த்ததாக அவர் தெரிவித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்ரீதியான சவால்களை மட்டுமல்லாமல், முடி இழப்பு காரணமாக மனரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதை புரிந்து கொள்ள முடிவதாக அவர் கூறினார்.

இதுபோன்ற சூழலில், நோயாளிகளுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் தங்களது தலைமுடியை தானமாக வழங்குவது மிகவும் பாராட்டத்தக்க மற்றும் மனிதநேயமான செயல் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பயனளிக்கும் நல்ல முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தளமாகவும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்வுகள் அதிகளவில் பகிரப்பட்டால், மேலும் பலர் இதுபோன்ற உதவிகளில் பங்கேற்க முன்வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு, தன்னால் இயன்ற முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் உறுதியளித்தார்.

A Gift of Hope for Cancer Patients: Soundarya Rajinikanth Launches Mega Hair Donation Initiative with Over 800 Participants

In a heartwarming initiative aimed at supporting cancer patients experiencing hair loss during treatment, a special hair donation event involving more than 800 participants was launched in Chennai.

The initiative was jointly organised by Ladies Circle India and Sri Ramachandra Medical College and Research Institute. Filmmaker and producer Soundarya Rajinikanth attended the event as the chief guest and officially inaugurated the remarkable social welfare initiative.

Addressing the gathering and later speaking to the media, Soundarya Rajinikanth shared her personal connection with the cause. She recalled witnessing her grandmother experience hair loss after being affected by cancer, adding that the experience helped her understand the emotional challenges faced by cancer patients.

She said that while cancer patients undergo several physical and emotional struggles, hair loss can significantly impact their confidence and well-being. She praised the participants who came forward to donate their hair, describing it as a meaningful and compassionate gesture that could bring hope and comfort to those battling the disease.

Soundarya also urged people to make positive use of social media by spreading awareness about meaningful social initiatives. She encouraged people to share and support such welfare-oriented campaigns, noting that greater awareness could inspire more individuals to participate in similar acts of kindness.

Expressing her support for such initiatives, Soundarya Rajinikanth said that she would continue to extend her support to meaningful causes that bring hope and encouragement to people in need.