Friday, November 6
Shadow

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்!

டாக்டர் டூமின் அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புதிய போஸ்டர்கள் – டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் வெளியாகிறது!

உலகம் முழுவதும் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்டத் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இப்படம் குறித்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முக்கிய வில்லனாக உருவெடுத்துள்ள டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர்களில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஒன்றிணைந்துள்ள இப்படம், அதிரடி சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் பரபரப்பான கதைக்களம் என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ளது. மார்வெல் திரைப்படங்களுக்கே உரிய பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் தயாராகி வருகிறது.

மேலும், ரசிகர்களின் திரையரங்க அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் 4DX, RealD 3D, ScreenX, Dolby மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் Infinity Vision உள்ளிட்ட நவீன பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

புதிய போஸ்டர்கள் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள மார்வெல் ஸ்டுடியோஸ், வெளியீட்டிற்கான கவுண்ட்டவுனையும் தொடங்கியுள்ளது.

அதன்படி, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது.

Marvel Studios Unveils Five Stunning New Posters for ‘Avengers: Doomsday’, Raising Fan Excitement!

Featuring a striking glimpse of Doctor Doom, the newly released posters add to the anticipation for one of the year’s most awaited cinematic spectacles. The film arrives in Indian theatres on December 17 in four languages.

The excitement surrounding Marvel Studios’ highly anticipated film ‘Avengers: Doomsday’ has reached a new high, with the studio unveiling five brand-new posters from the much-awaited cinematic spectacle.

With the film’s theatrical release drawing closer, the newly revealed posters have further heightened anticipation among Marvel fans worldwide. Among the key highlights is the striking appearance of Doctor Doom, one of the most formidable villains in the Marvel Cinematic Universe, whose presence has become a major talking point among fans.

Bringing together an ensemble of prominent actors, ‘Avengers: Doomsday’ promises a grand cinematic experience packed with high-octane action sequences, spectacular visuals and an intriguing storyline. Staying true to the scale and storytelling that Marvel Cinematic Universe films are known for, the film is gearing up to deliver an unforgettable theatrical experience.

Taking the viewing experience to the next level, the film will also be released in premium theatrical formats, including 4DX, RealD 3D, ScreenX, Dolby and Marvel Studios’ Infinity Vision.

With the unveiling of these five new posters, Marvel Studios has further intensified the excitement as the countdown to the film’s release begins.

‘Avengers: Doomsday’ is all set to hit Indian theatres on December 17 in English, Hindi, Tamil and Telugu.