Friday, November 13
Shadow

ரத்தம் தெறிக்கும் பின்னணியில் ‘செங்குலம்’… கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய பட டைட்டில், கிளிம்ப்ஸ் வெளியீடு!

ரத்தம் தெறிக்கும் பின்னணியில் ‘செங்குலம்’… கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய பட டைட்டில், கிளிம்ப்ஸ் வெளியீடு!

தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் உருவாகும் ஆக்‌ஷன் கதைகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், ரத்தம், மண், வீரம் என அதிரடியான பின்னணியுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படமான ‘செங்குலம்’. இப்படத்தின் தலைப்புப் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தை தீபக் ரவி இணைந்து தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

வெளியாகியுள்ள தலைப்புப் போஸ்டரே படத்தின் கதைக்களம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. ரத்தம் படிந்த வேல்கம்பு, அதனைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள், கரிசல் மண் மற்றும் புழுதி எனப் போஸ்டர் முழுவதும் ஒரு தீவிரமான போர்க்களத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது.

கிளிம்ப்ஸ் வீடியோவும் வழக்கமான அறிமுகக் காட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்துள்ளது. கரிசல் மண்ணில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற வளையலை நோக்கி ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று வேகமாகப் பாய்ந்து வந்து அதை உடைத்துச் சிதறடிக்கிறது. அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் ‘செங்குலம்’ என்ற தலைப்பு வெளிப்படுகிறது. சுற்றிலும் பதிவாகியிருக்கும் காலடித் தடங்களும், செருப்புத் தடங்களும் ஏதோ ஒரு மோதலுக்கான பின்னணியை உணர்த்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வசனங்களோ, கதாபாத்திரங்களின் அறிமுகமோ இல்லாமல் குறியீடுகள் மூலமாகவே படத்தின் தன்மையை உணர்த்தும் இந்த கிளிம்ப்ஸ், ரசிகர்களிடம் கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, கரிசல் மண்ணின் பின்னணியையும் அதன் வாழ்வியலையும் மையமாகக் கொண்ட வித்தியாசமான திரைப்படமாக ‘செங்குலம்’ உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை, கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். R. மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்கப் பணிகளைக் கவனிக்கின்றனர். தமிழ் அரசன் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக ஸ்ரீநாத் விஸ்வநாதன் பணியாற்றுகிறார். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, மோனிக் போஸ்டர் வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கோவில்பட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படத்தை 2027-ம் ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தலைப்பும், வெளியான சில நொடிக் காட்சிகளும் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ‘செங்குலம்’ படத்தின் முழுமையான கதைக்களம் என்ன, கவுதம் ராம் கார்த்திக்கின் கதாபாத்திரம் எத்தகைய பரிமாணத்தில் அமையப்போகிறது என்பதற்கான விடை அடுத்தடுத்த அறிவிப்புகளில் தெரியவரும்.

 

Blood, Dust and Revenge: Gautham Ram Karthik’s New Film ‘Sengulam’ Title Poster and Glimpse Released!

A striking new glimpse has sparked curiosity among movie buffs as the makers of Gautham Ram Karthik’s upcoming film have officially unveiled its title as ‘Sengulam’, along with the title poster and glimpse video. Set against a raw and intense backdrop, the visuals hint at a powerful rural action drama.

The film is produced by Kannan Ravi under the banner of Kannan Ravi Group, with Deepak Ravi serving as co-producer. The project marks the directorial debut of Chinnasamy Ponnaiya, who has also penned the screenplay and dialogues. Music for the film is composed by Yuvan Shankar Raja.

The title poster itself makes a strong impression with its striking imagery. A bloodstained spear, red fabric, dry soil and clouds of dust create a rugged visual atmosphere that perfectly complements the film’s title. The overall design hints at a story rooted in intense emotions, conflict and rural life.

The newly released glimpse takes the visual narrative a step further. It opens with a red bangle placed on the soil of a dry landscape. Suddenly, a blood-soaked spear comes rushing towards it, smashing the bangle into pieces. Amid the scattered fragments, the film’s title, ‘Sengulam’, makes a dramatic appearance.

The footprints and footwear impressions scattered across the surrounding landscape add another layer of intrigue, suggesting an intense incident or confrontation that has unfolded in the area. Without revealing much about the storyline or introducing its characters, the glimpse relies entirely on powerful visual imagery to establish the film’s mood and tone.

The intriguing presentation has already raised questions about the film’s storyline and the world it seeks to portray. The use of rural imagery, traditional elements and intense action-oriented visuals makes ‘Sengulam’ an interesting addition to Gautham Ram Karthik’s upcoming projects.

On the technical front, Giftson Robert handles cinematography, while R. Mohan and Vaira Balan serve as art directors. Tamil Arasan is in charge of editing, and Srinath Viswanathan serves as Head of Operations. Mahesh Mathew choreographs the action sequences, while Monique is responsible for the poster design.

The shooting commenced in Kovilpatti and is currently progressing across various locations in Tamil Nadu, including Thoothukudi, Tirunelveli, Tenkasi, Theni and Pollachi. Portions of the film are also being shot in Kashmir.

Planned as a five-language release, ‘Sengulam’ will hit theatres in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi in 2027.

With its intriguing title, striking promotional visuals and the musical association of Yuvan Shankar Raja, ‘Sengulam’ has certainly managed to capture attention. More details about Gautham Ram Karthik’s character and the film’s storyline are expected to emerge in the coming days.