Friday, November 13
Shadow

ஒரே இரவில் அரங்கேறும் காதல், குற்றம், அதிரடி ஆட்டம்… ‘STATION – Hunt For Survival’!

ஒரே இரவில் அரங்கேறும் காதல், குற்றம், அதிரடி ஆட்டம்… ‘STATION – Hunt For Survival’!

அஜய் கார்த்தி – தீபா பாலு இணையும் புதிய திரைப்படம்… சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் உருவாகும் திரில்லர் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், காதல், குற்றம், சஸ்பென்ஸ், அதிரடி எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒரே இரவின் பின்னணியில் இணைத்து உருவாகி வருகிறது ‘STATION – Hunt For Survival’ திரைப்படம்.

‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அஜய் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தீபா பாலு கதாநாயகியாக இணைந்துள்ளார். இருவரும் முதன்முறையாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஒரு இரவு… அதற்குள் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்… அவற்றைச் சுற்றிப் பின்னப்படும் காதல், குற்றம் மற்றும் உயிரைப் பணயம் வைக்கும் போராட்டம் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகி வருகிறது. குறிப்பாக, ஒரே இரவில் கதை முழுவதும் நிகழ்வது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் எழுதி இயக்கும் இப்படத்தை KP INFOTAINMENT நிறுவனத்தின் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். தனது முதல் தயாரிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் KP INFOTAINMENT, வழக்கமான கதைக்களங்களிலிருந்து மாறுபட்ட புதிய முயற்சியாக இப்படத்தை உருவாக்கி வருகிறது.

படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இதன் பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையத்தைச் சுற்றியே நகர்வதுதான். மொத்தப் படத்தில் சுமார் 70 சதவீதக் காட்சிகள் காவல் நிலையப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காகச் சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் இயல்புத்தன்மைக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் கார்த்தி – தீபா பாலு ஜோடியுடன், பிரபல இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ், மலையாளத் திரைப்படமான ‘திரிடம்’ மூலம் கவனம் பெற்ற தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா, சப்பாணி பாய்ஸ் முரளி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவும் வலுவாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவை சுபாஸ் பாரதி மேற்கொள்ள, இசையமைப்புப் பணிகளை அருண் ராஜ் கவனிக்கிறார். கலை இயக்குநராக அய்யப்பன் S, சண்டைப் பயிற்சியாளராக பிரபு ஜாக்கி, ஆடை வடிவமைப்பாளராக தினேஷ் பாபு G V, படத்தொகுப்பாளராக முத்தையன் U ஆகியோர் பணியாற்றுகின்றனர். நிர்வாகத் தயாரிப்பை விக்கி ஆண்ட்ரு மேற்கொள்கிறார். VFX மேற்பார்வையை சரவண பாலாஜி K – Time Stone FX நிறுவனம் கவனிக்கிறது. மார்க்கெட்டிங் பணிகளை Digitally Powerful மேற்கொள்ள, மக்கள் தொடர்புப் பணிகளை சதீஷ் குமார் – S2 Media கவனிக்கின்றனர்.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, காவல் நிலையப் பின்னணியில் காதலும் குற்றமும் மோதும் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘STATION – Hunt For Survival’ உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வித்தியாசமான கதை சொல்லல், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிரடி நிறைந்த காட்சிகளுடன் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை வழங்கும் முனைப்பில் படக்குழு செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பக் குழு:

  • எழுத்து, இயக்கம் – மாறன் கார்த்திகேயன்
  • தயாரிப்பு – கே. தினேஷ் குமார்
  • தயாரிப்பு நிறுவனம் – KP INFOTAINMENT
  • ஒளிப்பதிவு – சுபாஸ் பாரதி
  • இசை – அருண் ராஜ்
  • கலை இயக்கம் – அய்யப்பன் S
  • சண்டைப் பயிற்சி – பிரபு ஜாக்கி
  • ஆடை வடிவமைப்பு – தினேஷ் பாபு G V
  • படத்தொகுப்பு – முத்தையன் U
  • நிர்வாகத் தயாரிப்பு – விக்கி ஆண்ட்ரு
  • VFX மேற்பார்வை – சரவண பாலாஜி K – Time Stone FX
  • மார்க்கெட்டிங் – Digitally Powerful
  • மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் – S2 Media

A Single Night. A World of Love, Crime and Action! Ajay Karthi and Deepa Balu Join Hands for ‘STATION – Hunt For Survival’

A gripping love-crime-action thriller directed by debutant Maaran Karthikeyan; shooting progresses at a brisk pace across Chennai.

Tamil cinema is set to witness an intriguing new thriller with ‘STATION – Hunt For Survival’, featuring an unusual narrative that brings together romance, crime, suspense and high-octane action, all unfolding over the course of a single night.

The film stars Ajay Karthi, who has been part of projects such as ‘Kaalidas 2’ and ‘Dark’, alongside Deepa Balu, who has earned considerable attention through her performance in the popular OTT series ‘Heart Beat’. The combination of these two performers promises an interesting on-screen pairing. The shooting is currently progressing at a brisk pace across various locations in Chennai.

As the title suggests, ‘STATION – Hunt For Survival’ revolves around a series of unexpected events that unfold within one night. Blending elements of love, crime, suspense and survival, the film is built around an engaging screenplay filled with unpredictable situations and dramatic turns. Its distinctive single-night narrative forms one of the key highlights of the project.

Written and directed by debutant Maaran Karthikeyan, the film is produced by K. Dinesh Kumar under the banner of KP INFOTAINMENT. Marking the production house’s entry into Tamil cinema, the film is being developed with an emphasis on fresh storytelling and an unconventional narrative approach.

One of the most interesting aspects of the film is its setting. Nearly 70 per cent of the sequences take place inside a police station, which serves as the central backdrop for the narrative. To ensure authenticity and visual realism, the team has constructed an elaborate police station set at a renowned film and technical institute in Chennai. The specially designed set is expected to add considerable depth and credibility to the proceedings.

Apart from Ajay Karthi and Deepa Balu, the film features an impressive ensemble cast comprising renowned filmmaker and actor A. Venkatesh, Dinesh Prabhakar, who garnered attention through the Malayalam film ‘Dridam’, Balahaasan, Ramesh Thilak, Munnar Ramesh, Jai Krishna, Vaazhai Janaki, Madras Rama, Anu Sri Velan, Prakash, Sophia and Chappani Boys Murali, among others.

The film also brings together a promising technical team. Cinematography is handled by Subhas Bharathi, while Arun Raj composes the music. Ayyappan S serves as the art director, Prabhu Jacky choreographs the stunt sequences, Dinesh Babu G V takes care of costume design, and Muthayan U is in charge of editing. Vicky Andrew serves as the Executive Producer, while Saravana Balaji K of Time Stone FX supervises the visual effects. Marketing is handled by Digitally Powerful, with Sathish Kumar of S2 Media overseeing the film’s public relations.

With its distinctive single-night storyline, a predominantly police station-based setting and an engaging combination of romance, crime, suspense and action, ‘STATION – Hunt For Survival’ is shaping up to be an intriguing addition to Tamil cinema.

Currently progressing through its shooting schedule, the film aims to offer audiences an engaging cinematic experience through its gripping screenplay, unexpected twists and compelling performances.

TECHNICAL CREW

  • Written & Directed by: Maaran Karthikeyan
  • Produced by: K. Dinesh Kumar
  • Production House: KP INFOTAINMENT
  • Cinematography: Subhas Bharathi
  • Music: Arun Raj
  • Art Direction: Ayyappan S
  • Stunt Choreography: Prabhu Jacky
  • Costume Design: Dinesh Babu G V
  • Editing: Muthayan U
  • Executive Producer: Vicky Andrew
  • VFX Supervisor: Saravana Balaji K – Time Stone FX
  • Marketing: Digitally Powerful
  • Public Relations: Sathish Kumar – S2 Media