Tuesday, November 17
Shadow

தேஜா சஜ்ஜா வாழ்வில் புதிய அத்தியாயம்! மௌரியாவுடன் நிச்சயதார்த்தம் – ஒரே இடத்தில் குவிந்த திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்!

தேஜா சஜ்ஜா வாழ்வில் புதிய அத்தியாயம்! மௌரியாவுடன் நிச்சயதார்த்தம் – ஒரே இடத்தில் குவிந்த திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்!

‘ஹனுமான்’ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் தேஜா சஜ்ஜா, தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கும் மௌரியாவுக்கும் இன்று (நவம்பர் 16) ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

திரையுலகில் அடுத்தடுத்த வெற்றிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் தேஜா சஜ்ஜாவின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் நேரில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, தெலங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தெலங்கானா திரைப்படத் துறை அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, அமைச்சர் சீதக்கா, முன்னாள் அமைச்சர்கள் ஹரீஷ் ராவ், கண்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திரையுலக நட்சத்திரங்களின் வருகையும் இந்த நிச்சயதார்த்த விழாவுக்கு கூடுதல் சிறப்பைச் சேர்த்தது. இயக்குநர் கே. ராகவேந்திர ராவ், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, தில் ராஜு, டி.ஜி. விஸ்வ பிரசாத், சுஷ்மிதா கொனிடேலா, சாஹு கரபதி, வெங்கட் போயனப்பள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர்கள் ரவி தேஜா, நானி, ராணா டகுபதி, அதிவி சேஷ், ஸ்ரீகாந்த், சுதீர் பாபு, வரலட்சுமி சரத்குமார், நிதி அகர்வால், நிஹாரிகா கொனிடேலா, ரித்திகா நாயக், இமான்வி உள்ளிட்டோர் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர்கள் பி. கோபால், அனில் ரவிபுடி, பிரசாந்த் வர்மா, சிவா நிர்வாணா, நந்தினி ரெட்டி, கார்த்திக் கட்டம்னேனி, மாருதி, சந்து மொண்டேட்டி, சைலேஷ் கொலானு, பி.வி.எஸ். ரவி உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இத்தனை பிரபலங்கள் ஒரே இடத்தில் சங்கமித்திருந்தாலும், இந்த நிச்சயதார்த்த நிகழ்வு முழுக்க முழுக்க குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் இணைந்து கொண்டாடும் அன்பான நிகழ்வாகவே அமைந்தது. திரையுலகின் நட்சத்திர வருகைக்கு மத்தியில், மணமக்களின் மகிழ்ச்சியும் குடும்பத்தினரின் உற்சாகமுமே விழாவின் முக்கிய அம்சமாக இருந்தது.

இந்த நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து, தேஜா சஜ்ஜா – மௌரியா ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் வெளிநாடு அல்லது வேறு சிறப்பான சுற்றுலாத் தலத்தில் நடைபெறும் டெஸ்டினேஷன் திருமணமாக அமையவுள்ளது.

திரையில் சூப்பர் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்து வரும் தேஜா சஜ்ஜா, நிஜ வாழ்க்கையிலும் புதிய பொறுப்புடன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கும் மௌரியாவுக்கும் இனிய இல்லற வாழ்க்கை அமைய திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Teja Sajja Begins a New Chapter in Life! Actor Gets Engaged to Mourya in a Star-Studded Ceremony

After winning hearts across the country with his superhero act in Hanu-Man, young actor Teja Sajja is all set to begin a new chapter in his personal life. The actor got engaged to Mourya in a grand yet intimate ceremony held today at the prestigious Taj Krishna Hotel in Hyderabad, in the presence of family members, close friends, political dignitaries and prominent personalities from the Telugu film industry.

The engagement turned into a memorable star-studded occasion, with several leading actors, filmmakers, producers and political personalities coming together to celebrate the couple’s special day.

Megastar Chiranjeevi, Telangana Governor Shri Shiv Pratap Shukla, Union Minister G. Kishan Reddy, Telangana Minister for Cinematography Komatireddy Venkat Reddy, Minister Seethakka, and former ministers Harish Rao and Ganta Srinivasa Rao were among the distinguished guests who attended the ceremony and blessed the couple.

The Telugu film fraternity marked its presence in impressive numbers. Legendary filmmaker K. Raghavendra Rao, along with renowned producers Allu Aravind, Suresh Babu, Dil Raju, TG Vishwa Prasad, Sushmita Konidela, Sahu Garapati and Venkat Boyenpalli, attended the celebrations.

Several popular actors, including Ravi Teja, Nani, Rana Daggubati, Adivi Sesh, Srikanth, Sudheer Babu, Varalaxmi Sarathkumar, Nidhhi Agerwal, Niharika Konidela, Ritika Nayak and Imanvi, were also present to extend their wishes to the couple.

The event also witnessed the presence of noted filmmakers B. Gopal, Anil Ravipudi, Prasanth Varma, Shiva Nirvana, Nandini Reddy, Karthik Gattamneni, Maruthi, Chandoo Mondeti, Sailesh Kolanu and BVS Ravi, among several other prominent names from the industry.

Despite the presence of a large number of celebrities and distinguished guests, the engagement retained the warmth of a personal family celebration. The occasion brought together people who share a close bond with Teja Sajja and his family, making the special day even more memorable.

Following the engagement, Teja Sajja and Mourya are set to tie the knot in December at a destination wedding. The upcoming celebrations are expected to mark another beautiful milestone in their journey together.

While Teja Sajja continues to entertain audiences as a superhero on screen, the actor is now embarking on an exciting new journey in his personal life. Wishing Teja Sajja and Mourya a lifetime of love, happiness and togetherness!