
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும் வரும் ஏப்ரல் 13-ம் தேதி டிசர் வர அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு பல்கேரியாவில் நடந்து வற்றுகிறது அடுத்த வாரம் இறுதியில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது
