Thursday, April 30
Shadow

2017ம் ஆண்டின் சிறந்த படங்களில் எங்கள் கிடாயின் கருணை மனுவும் அடங்கும்

ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறும், அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் சவாலான காரியமாகவே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் உலக சினிமா மீது வைத்திருக்கும் பேரார்வம் தான். தற்போது அவர்களின் ரசனைகளை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக இருக்கின்றது, நல்ல தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம். அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா (காக்கா முட்டை புகழ் மணிகண்டனின் உதவியாளர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் விதார்த் மற்றும் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் என இரண்டின் கலவையில் மிக அழகாக உருவாகி இருக்கும் எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம், வருகின்ற மே 6 ஆம் தேதி அன்று, நியூயார்க் நகரத்தில் உள்ள ‘வில்லேஜ் திரையரங்கில் திரையிடப்படுகின்றது. அதுமட்டுமின்றி நியூயார்க் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படம் திரையிடப்பட இருக்கின்றது” என்று கூறுகிறார் ஈரோஸ் சவுத் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிட்தி புஜாரா.

“புதுமையான கதைக்களங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் வெளியான ‘துருவங்கள் 16’, ‘குற்றம் 23’, ‘மாநகரம்’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படங்கள். நிச்சயமாக அந்த வரிசையில் எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படமும் இடம் பெறும் என உறுதியாக நம்புகின்றேன். சுரேஷ் சங்கையாவின் கதை மீதும், அவர் படத்தை உருவாக்கிய விதமும் தான் எங்களின் அந்த உறுதியான நம்பிக்கைக்கு காரணம். எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் அந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும்” என்கிறார் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி

Leave a Reply