Wednesday, June 24
Shadow

போங்கு – திரைவிமர்சனம் (கலகலப்பு விறுவிறுப்பு ) Rank 3.5/5

இந்த வாரம் சினிமா ராசிகள் பாடு கொஞ்சம் கொண்டாட்டம் என்று தான் சொல்லணும் காரணம் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் சிறந்த படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது அதிலும் குறிப்பாக இளம் இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள். என்ற பெருமையும் உள்ளர்வர்கள். அனால் இப்ப நாம் பார்க்க போகிறபடத்தின் இயக்குனர் கொஞ்சம் சினிமாவில் இருந்தவர். அதுவும் சாதாரணமாண ஆள் இல்லை இவரின் கால்ஷீட்க்கு காத்திருப்பவர்கள் அதிகம் யார் இவர் என்ற ஒரு கேள்வி இந்தியாவின் மிக சிறந்த கலை இயக்குனர் சாபு சிரில் இவர் கலை இயக்குனர் மட்டும் இல்லை பல பிரமாண்டமான படங்களின் தயாரிப்பு நிர்வாகி என்றும் சொல்லணும் அவரின் உதவியாளர் இயக்கி உள்ள படம் தான் போங்கு

இயக்குனர் தாஜ் புலியிடம் பயிற்சி பெற்று வந்தவர் என்பதை தன முதல் படத்திலே நிருபித்துள்ளார் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவுக்கு புது கதை வித்தியாசமான திரைகதை அதற்கு தேவையான நட்சத்திரங்கள் ஒரு படத்தின் வெற்றி எங்கு நிர்ணயம் பண்ணுகிறது தெரியுமா படத்தின் கதையும் அதற்கு சரியான நட்சத்திரமும் தான் அதை இந்த படத்தில் மிக சிறப்பக செய்துள்ளார் இயக்குனர் தாஜ்

இந்த படத்தில் நட்ராஜ் சுப்ரமணியன் ருஹி சிங் , மனிஷா ஸ்ரீ அதுல் குல்கர்னி முண்டாசு பட்டி ராம்தாஸ் , அர்ஜுன் வில்லன் ஷரத் லோகித்தஷ்வா , ராஜன் , பாவா லட்சுமணன், மயில்சாமி சாம்ஸ். மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் கதை திரைகதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தாஜ்

‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ஏற்ற கதைக்களம் என்பதால் சிறப்பாகவே செய்திருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. நட்டிக்கு நிக சிறந்த கதை என்று தான் சொல்லணும் அவருக்கு ஏற்ப கதைகளம் என்பதால் சும்மா புகுந்து விளையாடியுள்ளார்.

அறிமுகநாயகி ரூஹி சிங்கிற்கு அதிகளவில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். அர்ஜுனன், முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

சரத் லோகித்ஸ்வா, மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார். நட்டிக்கு எதிராக அவரது பேச்சும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுல் குல்கர்னி குறைவான காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். பத்து நிமிடம் மட்டுமே வந்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறார் சாம்ஸ். இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பு மழை.

இயக்குநர் தாஜ் ஒரு வித்தியாசமான கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நட்டியிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் பல கார்கள் உபயோகப்படுத்தி, கலர்புல்லாக காண்பித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை தொய்வு அடையாமல் பார்த்துகொண்டது சிறப்பு. காமெடி அக்ஷன் இப்படி எல்லாம் கலந்து கொடுத்து இருப்பது அருமை படத்தில் காதல் கட்டி பிடித்தல் இப்படி அருவெறுப்பான காட்சிகள் இல்லை என்பது மேலும் சிறப்பு

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஆனால், பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது.

மொத்தத்தில் போங்கு கலர்புல் கேங் Rank 3.5/5

Leave a Reply