
அஜித், காஜல் அகர்வால் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் ‘விவேகம்’. அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சர்வைவா’ பாடலின் முழு ஆடியோ, இரண்டு நாட்களுக்கு வெளியானது. ராப் சிங்கர் யோகி பி இந்தப் பாடலைப் பாடியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அனிருத். பொதுவாக, கடந்த சில வருடங்களாக அஜித் படத்துக்கு இசை வெளியீட்டு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ நடைபெறுவதில்லை. தற்போதும் அப்படியே இசை வெளியீட்டு விழா இல்லாமல், அடுத்த மாதம் நேரடியாக ஆடியோ சிடியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
