அஜித் இந்திய சினிமாவின் மிக பெரிய ஜாம்பவான் சொன்னது பிரபல ஹாலிவுட் நடிகர்
சர்வதேச தரம் வாய்ந்த உளவு சார்ந்த படங்களில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அவசியமானவை. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே இவ்வாறான படங்களில் நடிக்க முடியும். இந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான 'விவேகம்' படத்தில் அஜித் குமாருடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க , 'சத்ய ஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் 'விவேகம்' ரிலீஸாகவுள்ளது. 'Casino Royale', '300: Rise Of An Empire', 'The Transporter Refunded' போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் [ Serge Crozon Cazin ] ' விவேகம்' படத்தில் கதாநாயகன் அஜித்தின் அணியான ஐவரில் ஓருத்தராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து ச...


