
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய ட்ரெண்டாக மாறியுள்ளது. கோடிக்கணக்கானோர் காணும் இதில் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா துறை பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது ஓவியாவிற்கு மட்டும் தான். நிகழ்ச்சியில் இருக்கும் மற்றவர்கள் ஓவியா சரியில்லை அவர் நடிக்கிறார் என்று குறை கூறி வருகின்றனர்.
ஆனால் ரசிகர்களோ அவர் தான் நிஜமாக நடந்து கொள்கிறார் மற்றவர்கள் அனைவரும் பொய் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் ‘பார்ட்டி’ படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு வேறொரு விஷயம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்த ரசிகர் ஒருவர், ‘அங்க ஓவியாவுக்கு அநீதி நடக்கிறது நீங்கள் எதுபற்றி டுவிட் செய்கிறீர்கள்’ என்று கேட்க, பதறி போன வெங்கட் பிரபு ‘ஓவியாவிற்கு என்ன நேர்ந்தது’ என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதோ அவரது பதிவு

