
நீண்ட இடைவெளிக்குப்பின் பாலா இயக்கி வரும் படம் ‘நாச்சியார். இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘‘நாச்சியார் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த ஞாபகங்கள் எப்போதும் நினைவில் நிலைக்கும். பாலா சார் மற்றும் ஜோதிகா மேடமுக்கு நன்றி ” என்று பதிவு செய்துள்ளார். மேலும், நடிகை ஜோதிகா தற்போது முழுக்க முழுக்க தன்னைப் முதன்மைப்படுத்தும் கேரக்டர்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.அப்படி வந்த படம் தான் இந்த ‘நாச்சியார். இதில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷின் பதிவு இதோ உங்கள்