
அஜித் நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அட்டகாசமாக உருவாகியுள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் உருவாகியுள்ளது, ஆனால் பலர் படத்தின் ட்ரைலர் வெளி வருவது சந்தேகம் தான் என கூறுகின்றனர்.
படத்தின் ட்ரைலர் வெளியானால் அஜித், அக்ஷராஹாசன், காஜல் அகர்வால் மற்றும் விவேக் ஒப்ராய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் என்னவென்று தெரிந்து சுவாரஷ்யங்கள் குறைந்து விடும் என இயக்குனர் சிவா கருதுகிறாராம், மேலும் இதனால் தான் வேதாளம் படத்தின் டிரைலரும் வெளிவரவில்லை எனவும் கூறுகின்றனர்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் ட்ரைலரை வெளியிடுமாறு கூறியுள்ளதாம், இதனால் ட்ரைலர் வெளிவருமா? வராதா? என்பது கூடிய விரைவில் தெளிவாக தெரிந்து விடும்.
