Saturday, April 18
Shadow

புரியாத புதிர் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3.5/5

புரியாத புதிர் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு நல்ல படைப்பு என்று தான் சொல்லணும் காரணம் ஒரு வித்தியாசமான திரில்லர் ஆனால் பேய் படம் இல்லை யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு திரைகதை என்று தான் சொல்லணும் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மேலும் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்று தான் சொல்லணும்.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இசையமைப்பாளர் சாம் இவர் ஏற்கனவே விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்தவர் ஆனால் இவருக்கு இது தான் முதல் படம். சிறந்த இயக்குனரோடு சிறந்த இசையமைப்பாளர் சிறந்த ஒளிப்பதிவாளர் இப்படி ஒரு சிறந்த குழு கொடுத்துள்ள படம் தான் இந்த புரியாத புதிர் என்று சொல்லனும் படத்தில் கதையும் திரைக்கதையும் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு நாம் இந்த படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை மற்றும் பாடல்களை ரசிப்போம்

ஒவ்வொரு காட்சியும் ஓவியம் தீட்டியது போல ஒரு காட்சி அதோடு தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர் விஜய் சேதுபதி இவ்வளவு அழகாக இவரை இதுவரை யாரும் காண்பித்தது இல்லை என்று தான் சொல்லணும் வித்தியாசமான களம் இது விஜய் சேதுபதிக்கு அதை மிக சிறப்பாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும் குறிப்பாக மழையில் நனையும் காட்சியில் நம்மை மிரள வைக்கிறார் இந்த காட்சியில் விளக்கத்தை விட திரையில் நீங்கள் பார்க்கும் பொது அப்படி ஒரு மிரட்சி பிரமிப்பு விஜய் சேதுபதி நடிப்பில் தெரியும் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல நாம் இந்த ஒரு காட்சியை சொல்லி இருகிறோம் படம் முழுதும் வித்தியாசமான ஒரு விஜய் சேதுபதி நடிப்பை பார்க்கலாம்

காயத்திரி விஜய் சேதுபதி யோடு நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கிறார் அவரின் நடிப்பும் இப்ப்பப்ப்ப்பப்பா என்று சொல்லும் அளவுக்கு நடித்துள்ளார் இப்படி ஒரு திறமையான ஒரு நடிகையை அதுவும் தமிழ் நடிகையை ஏன் நாம் நிறைய படங்களில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இந்த படம் பார்க்கும் பொது தோன்றும்.

அதே போல மகிமா நம்பியார் குற்றம் 23 படத்திலே இவரின் நடிப்பை நாம் பார்த்து விட்டோம் அதைவிட பல மடங்கு மிக சிறந்த நடிப்பை இந்த படத்தில் வெளிபடுத்தியுள்ளார். விஜய் சேதுபதியின் நண்பனாக வரும் அர்ஜுன் ரஞ்சித் இருவரும் தன் நடிப்பை சிறப்பாக வெளிபடுதியுள்ளனர் .

இயக்குனர் ரஞ்சித் முதல் பாதியில் மிக அழகனா காதல் விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி காதல் காட்சிகளையும் இரண்டாம் பகுதியில் மிகவும் வித்தியாசமான ஒரு திரில்லர்யையும் கொடுத்துள்ளார். முதல் பாதி காதல் கவிதை போலவே இருக்கும் இரண்டாம் பகுதி திரில்லர் மிரட்டியுள்ளார் பார்க்கும் நமக்குள் ஒரு பரபரப்பை உண்டுபண்ணியுள்ளார் .

மொத்தத்தில் புரியாத புதிர் எல்லோருக்கும் பிடிக்கும் Rank 3.5/5

Leave a Reply