
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வகையாக முடிந்தாலும் ஆனால் மக்கள் இன்னும் அந்த மனநிலையில்தான் இன்னும் உள்ளனர் உண்மையை சொல்ல போனால் ஒரு சிலர் மீண்டும் இந்த நிகழ்ச்சி எப்ப ஆரம்பிப்பார்கள் என்றும் கேட்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அது ஆரவ் மற்றும் ஓவியா காதல் தான் இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் மிக பெரிய வெற்றி என்றும் சொல்லணும்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்து விட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து விட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற ஆரவ்வை பிரபல பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்தது, அப்போது ஆரவ் கூறியதாவது, மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்ளவே இந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
பிரிந்த ஆரவ் ஓவியா நூறாவது நாள் எப்படி சந்திக்க போகிறார்கள் என்ற ஒரு கேள்வி மக்களின் மனதில் இருந்தது ஓவியா ஆரவுடன் பேசுவாரா என்றெல்லாம் கேள்வி இருந்தது ஆனால் ஓவியா மிக சகஜமாக ஆரவுடன் பேசியது மேலும் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் ஓவியா
இந்த சூழ்நிலையில் ஒரு பேட்டியில் ஆரவ் நான் வெற்றி பெறுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை, சினேகன் அல்லது கணேஷ் தான் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்தேன் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் ஓவியாவின் காதலை பற்றி கேட்டதற்கு ஓவியா பற்றி பேசும் போது, அவர் என் மீது விருப்பம் வைத்துள்ளார் எனக்கு தெரியும், ஆனால் இது ஒத்துவராது என்பதால் தான் தவிர்த்தேன். அவரும் குழப்பமான மனநிலையில் இருந்தார்.
ஓவியாவுடன் இணைந்து நடிப்பீர்களா? என கேட்டதற்கு ரசிகர்கள் ஆசை பட்டால் நிச்சயம் இணைந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.
