
மெர்சல் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பால் வசூலி விஜய் தெறிக்க விட, அஜித் ரசிகர்கள் மெர்சலாகி கிடக்கிறார்கள்.
சில அஜித் ரசிகர்கல் மெர்சல் படம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இருந்தாலும், படத்தை பார்க்கும் அனைவரும், சூப்பர்…என்று கூறுகின்றனர். அதற்கு ஏற்றவாறு, படம் ரிலீஸான முதல் நாளில், பாகுபலி சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம் படத்தின் வசூல் சாதனையை ‘மெர்சல்’ முறியடித்துவிட்டது.
விவேகம் படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1. 21 கோடி வசூலித்தது. விஜய்யின் மெர்சல் விவேகத்தை முந்தி ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது.
அமெரிக்காவில் ரிலீஸான அன்று மற்றும் ப்ரீமியர் ஷோக்கள் மூலம் மெர்சல் படம் ரூ. 3.08 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் நல்ல வசூல் செய்துள்ளது மெர்சல்.
வார நாளில் ரிலீஸாகியும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் மெர்சல் நல்ல வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ரூ. 68.01 லட்சமும், இங்கிலாந்தில் ரூ. 81.08 லட்சமும் வசூலித்துள்ளது. மலேசியாவிலும் புதன்கிழமை ரிலீஸான மெர்சல் ரூ. 90.31 லட்சம் வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்றி உலக நாடுகள் பலவற்றில் சக்க போடு போடும் ‘மெர்சல்’ படத்தால் விஜய் மற்றும் அட்லி டீம் செம ஹாப்பியில் இருக்கிறார்களாம்.
