Wednesday, January 19
Shadow

விஜய்யின் மெர்சலில் அட்லியின் சொதப்பல்ஸ் நெட்டிசன்ஸ் நக்கல்ஸ்

விஜய் கோடிகளில் சம்பளம் பெற்று ஐந்து ருபாய் டாக்டர் ஆக நடித்திருக்கும் மெர்சல் படத்தில் மருத்துவர்களை குறை கூற தெரிந்திருக்கும் அட்லி அவர்களுக்கு   படம் முழுக்க தூவி இருக்கும் மருத்துவ அபத்தங்கள் டூ மச் –

விமான நிலையத்தில் விஜய்யால் காப்பாற்றப்படும் பெண்ணிடம் கூறுவார்கள்-தலை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று ஆனால் அவருடைய டிகிரி MBBS MD !

சூர்யா-பெரிய டாக்டர், டீன் -Ulnar artery காண்பித்து Radial  artery அறுத்து விடுவேன் என்று மிரட்டும் போது சிரிப்புதான் வருகிறது.

சூர்யா வின் குவாலிஃபிகேஷன்  MBBS MD FRCS !

tracheostomy எல்லாம் கிரெடிட் கார்டு வைத்து cut  செய்யும் அளவுக்கு easy  இல்லை சாரே!

சூர்யாவின் போஸ்ட் டீன் என்று இருக்கும்-வில்லேஜில் எது டீன் போஸ்ட்?

முதல் குழந்தை டெலிவரி ஆகி விஜய் தூக்கி காட்டுகிறார்-தொப்புள் கொடி இல்லாமல்!

caesarian அறுவை செய்யப்படுவது முதுகில் ஊசி போட்டு செய்யப்படும் போது கால்களை உதறி எப்படி வலிப்பு வரும்-இடுப்புக்கு கீழ்  முழுவதும் அசைவற்று அல்லவே இருப்பார்கள்?

மாஸ்டர் ஹெல்த் checkup மூலம் எத்தனை பேருக்கு பல பிரச்சினைகள் கண்டு பிடிக்கப்படுகிறது என்று தெரியுமா?

பாரிஸில் நடக்கும் மாநாட்டுக்கு வேட்டியில் செல்லும் விஜய் உள்ளூரில்  என் அப்படி இல்லை? டிரஸ் code என்று ஒன்று உள்ளது தெரியுமா-இந்த இடத்துக்கு இந்த உடையில்தான் செல்ல வேண்டும்-இல்லா விட்டால்    லூசை பார்ப்பது போல் பார்ப்பார்கள் என்று தெரியாதா? நாங்கள் மருத்துவ மாநாட்டில் இப்படி வேட்டி கட்டி கொண்டு உள்ளூரில் சென்றாலே பத்து அடி தள்ளி போய் விடுவார்கள்-பாரிஸில் வேட்டி கட்டி கொண்டு போகிறாராம்!

பஞ்சாபில் 79  இல்  தொடங்கும் கதை இரண்டாவது விஜய் பிறக்கும் போது ஸ்கேன் செய்வதாக காட்ட படுகிறது-கிராமத்தில் ஏது எண்பதுகளில் ஸ்கேன்-மதுரை டௌனிலேயே அப்போது இருந்து இருக்காது.

சூர்யா விஜயை பார்த்த உடனே தெரிந்து கொள்ளும் போது கூடவே இருக்கும் சகாரியாவிற்கு தெரியாதா-போய் பெட்டியில் பதித்து உயிரை விடுகிறார்?

120 கோடி செலவு செய்து எடுக்கும் போது லாஜிக் இல்ல மாஜிக் செய்து வித்தை காட்ட முயற்சிக்கும் போது ஒரு மருத்துவரை ஆலோசனை குழுவில் போட்டு இருக்கலாமே ..

இன்னும் பல தப்புக்கள்- பிரபல .com வெப் சைட் தளத்தில்டைட்டானிக் படத்தையே தோற்கடித்து விடும் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் . எங்களை முட்டாள்கள் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? பெட்டெர் luck next தடவை.ரமணா படத்தில் எங்கள் சமூகத்துக்கு முருகதாஸ்  

 செய்த நல்ல விஷயத்தையே நீங்கள் செய்து இருக்கிறீர்கள். தயவு செய்து நீங்கள், கோபிநாத்-நீயா நானா- முருகதாஸ்   வகையறாக்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் சரி இல்லை என்றால் சித்த மற்றும் யுனானி அல்லது ஆயுர்வேத சிகிச்சை பார்த்து கொள்ளவும். எந்த அல்லோபதி மருத்துவரிடமும் சூடு சொரணை இல்லாமல் வந்து நிற்க வேண்டாம். உங்கள் அடுத்த படத்தில் திரை உலகில் நடக்கும் பித்தலாட்டங்களை( தியேட்டர் கான்டீன் பித்தலாட்டங்கள் வரை) காண்பியுங்கள்-உங்களை வீரன்  என்று ஒப்பு கொள்கிறோம். மருத்துவர்கள் தானே soft target . ஒரு முறை கோர்ட்டில் வருவதற்க்கே 15  லட்சம்  பெறும் வக்கீல்களை பற்றி உங்கள் அடுத்த படம் இருக்கலாமே?  செய்வீர்களா?

Leave a Reply

CLOSE
CLOSE