
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்கோர் என்பதோடு சிறந்த கதையம்சம் ஜோண்ட இயக்குனர் அதோடு எடுத்த எல்லா படங்களும் வெற்றி படங்கள் என்ற பட்டம் உள்ள ஒரு இயக்குனர் என்றால் அது பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜ மௌலி தான் இவர் இயக்கிய எல்லா படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பது மிக பெரிய சிறப்பு.
பாகுபலி வெற்றிக்கு பிறகு தன் அடுத்த படத்தை துவக்க இருக்கும் இயக்குனர் ராஜமௌலி யார் ஹீரோ என்ற ஒரு மாபெரும் கேள்வி குறி இருந்தது மீண்டும் பிரபாஸ் என்றும் ஒரு சில ஊடகங்கள் கூறியது அதற்கு விடை கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் ஷங்கர் தான். தற்போது அவர் ரஜினியை வைத்து 2.0 என்ற மாபெறும் படத்தை இயக்கி வருகிறார்.
அதேபோல் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது எஸ்.எஸ். ராஜமௌலி அவர்கள் தான். அதற்கு உதாரணம் பாகுபலி படத்தை சொல்லலாம். இப்படத்தை தொடர்ந்து என்ன படம், யாருடன் இணைந்து எடுக்க இருக்கிறார் என்று நிறைய கேள்விகள் வந்தன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது.
அதாவது ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து புதிய படம் எடுக்க இருக்கிறாராம்.
படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் தொடங்க இருக்கிறதாம்.
