Monday, December 6
Shadow

விவசாயிகளுக்கு குரல் கொடுக்க போகும் விஜய்

விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி என்றாலே எதாவது ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்து வெற்றி பெறுவார்கள் முதல் படத்தில் ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகள் பற்றி கூறினார்கள் அடுத்து தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்தனர் இதனால் இவர்கள் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தில் என்ன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள் தெரியுமா

அடுத்து விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் சமூக பிரச்சினைகளை சொல்லும் படமாக அமைந்தன. அவை வெற்றியும் பெற்றன.

இந்த வரிசையில் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் விஜய்யின் புதிய படமும் மக்கள் பிரச்சினையை சொல்லும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள்? விவசாயத்தை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய கருத்துக்கள் புதிய படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ஒருவர் விவசாயி. மற்றவர் மாற்றுத்திறனாளி என்று சொல்லப்படுகிறது. இது விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் இளைஞனின் கதையாக உருவாகிறது.

Leave a Reply

CLOSE
CLOSE