Monday, April 27
Shadow

`விஸ்வாசம்’ பட வேலையை பூஜையுடன் ஆரம்பித்த சிவா

`சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் `விஸ்வாசம்’ படத்தின் பூஜை நேற்று போடப்பட்டுள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’,‘விவேகம்’ படங்களை தொடர்ந்து சிவா – அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் `விஸ்வாசம்’. அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், முதற்கட்டமாக நேற்று இப்படத்திற்காக
பூஜை போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்த சிவாவின் தம்பி பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்கா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

`ஆரம்பம்' படத்திற்கு பிறகு அஜித்தின்`விஸ்வாசம்’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply