Monday, April 27
Shadow

சூப்பர் ஹீரோவாக நடிக்கும் சூர்யா

சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யா அடுத்ததாக `மாநகரம்’ பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இரும்பு கை மாயாவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply